நம்மிடம் இயேசுவைப் போன்ற நேசம் இருந்தால் அது நம் குடும்பங்கள், சபைகள் மற்றும் நம் அக்கம் பக்கத்தையும் நன்முறையில் மாற்றும். அது நாம் விரும்புவதை மற்றவர்களுக்குக் கொடுக்க அனுமதிக்கும். அது இந்த கிரகத்தில் நாம் விட்டுச்செல்லும் அடிச்சுவடுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதை சாத்தியமாக்கும்.
கீழுள்ள இணைப்பில் உள்ள உரிய பகுதிகளை வாசிக்க தயவு செய்து ஸ்க்ரோல் செய்யவும்.
நான் மூலையில் இருந்தபடியே, கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தலைவலியினால் நாள் முழுவதும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தும், புன்னகைத்தேன். அறை முழுவதும் புதிய விளையாட்டுச் சாமான்களும் பரிசுகளை சுற்றும் தாள்களும் சிதறிக்கிடந்தன. “என்னுடைய இரயில் வண்டி புத்தகம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா, பாட்டி?” என என் மகன் கேட்டான். அவன் தன் பிறந்த நாள் பரிசுப்பொருட்களை அனைவரிடமும் காட்டி பாராட்டுகளை பெற்றான். இரயில் வண்டி புத்தகத்தின் கடைசி பக்கத்தை திருப்பியபோது, அவன் அடுத்த பரிசை காட்ட தயாராய் இருந்தான். நான் துணிச்சலுடன் அதை எடுத்து விட நினைத்தேன்.
எனக்கு வலிக்கிறது.
“கேக் வெட்டும் நேரமாகிவிட்டது!” என்ற வாக்கியத்தை கேட்டதும். அவன் உணர்ச்சி வசப்பட்டு நான்கு வயதிற்கே உரித்தான வேகத்துடன் திரும்ப, காலுறை அணிந்து இருந்த அவன் பாதங்கள், வழுவழுப்பான தரையில் வழுக்கின. அவன் முகம் தரையில் பட்டு பற்கள் உதட்டில் பட்டு இரத்தம் வழிந்தது. கண்களில் கண்ணீரும் வாயில் இரத்தமும் வழிந்தன. நான் அவனை கைகளில் அள்ளி எடுத்து அவன் முதுகை தடவினேன். அவன் கண்ணீரும் இரத்தமும் என் சட்டையையும் விருந்தையும் நனைத்தன என் தோள்களில் அவன் முகம் புதைந்து இருக்க நாங்கள் ஆடும் நாற்காலியில் அமர்ந்தோம். அவன் அழுகையின் சத்தம் அதிகமானது மேலும் வலுத்தது.
என்னை நாள் முழுவதும் வாட்டிய தலைவலி என்னுடைய பயத்திலும் அக்கறையிலும் வேகமாக அடங்கியது. “எனக்கு அது சரியாக வேண்டும், என்னை விட்டு அது போக வேண்டும்!” ஒவ்வொரு விம்மலுடன் என் உடல்வலி மாறியது, என் தலையிலிருந்து என் இருதயத்திற்குள் மூழ்கியது. அதற்கு அடுத்த சில மணி நேரங்கள் விட்டுவிட்டு எழுந்து விம்மலுடன் வீக்கத்தின் மேல் வைத்த ஈரத்துணிகளால் நல்ல காலமாக, இரத்தம் உறைந்தது. நான் துணிச்சலுடன் அதை எடுத்து விட நினைத்தேன். ஆனால் அவனை ஆறுதல் படுத்த முயற்சிப்பதே நான் செய்ய வேண்டிய சிறப்பான செயலாகும். என் மகனுக்கு காயம் பட்டிருந்தது, அது எனக்கு வலிக்கிறது. இரக்கம், தயை, அனுதாபம், கருணை போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தில் நிபுணர்கள் வேறுபட்டாலும், இவை இரக்கத்தின் அனைத்து பார்வையுமாய் நாம் “அன்பின் செய்கை” என விவரிக்கிறோம்.
இரக்கம் என்னும் பெயர்ச் சொல்லுக்கு தயவு காட்டுவது, இரக்க உணர்வு, மற்றவர்களின் துயரத்தை துடைக்கும் விருப்பம் என்பது பொருளாகும்.
தயை மற்றும் இரக்கம் போன்றவை நாம் தினந்தோறும் கேட்கும் வார்த்தைகள். மற்றவர்கள் அனுபவிக்கும் உடல், மனம், இருதயம் சார்ந்த வலிகளை நாம் காணும் போது நமக்கு ஏற்படும் உணர்வை வெளிப்படுத்துகிறது. துன்பப்படுபவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அதிகமாக இருந்தால் நாம் அதை எம்பதி என்கிறோம். துன்பப்படுபவரின் தோலினுள் நாம் தவழ்ந்து சென்று நாம் அவருடன் உணர்வினால் ஒன்றாக கலந்தது போல் இருக்கும். தேவையும் துன்பமும் எதிர்நோக்கும் போது நம் இரக்கத்தின் பிரதிபலன் மனமார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறது. நாம் அவர்களின் கண்கள் மூலம் கண்டு, இருதயங்களின் மூலம் உணர்கிறோம். அந்த ஒத்த உணர்வு நம் உள்ளார்ந்த மனதில் இருந்து வருகிறது.
பவுல் கொலோசெயர் 3:12 உள்ளுறுப்புகளை குறிக்க கிரேக்க பதத்தில் “இரக்கம் உள்ள இருதயம்” என்பது நம் கவனத்தை அறிவியல் அல்லது தர்க்க அறிவில் இருந்து வேறுபட்ட, ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான அனுபவம் என்று அர்த்தம்
இரக்கத்தின் தேவன்
பெரும்பாலான மனிதர்கள் தங்களை விட உயர்ந்த சக்தியை நம்புகின்றனர். மெய்யான தேவனை அறியாதவர்கள், தாங்களாகவே ஒரு தெய்வத்தையோ அல்லது பல தெய்வங்களையோ மனித வாழ்வின் மாயைகளை விளக்கி உதவிட உருவாக்கினர். மனித சிந்தனையின் தெய்வம் இருதயமற்றது, உணர்வற்றது, ஏனெனில் உணர்வு என்பது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும். இந்த உணர்வற்ற தெய்வம் எப்போதும் உருகாத பனிக்கட்டியை போன்றது. மாறாக, பிரபஞ்சத்தின் மெய்யான தேவன் வெறும் எண்ணம் அல்லர். அவர் வெறும் சிந்தனை அல்லது அழிவற்ற சிந்திக்கும் சிந்தனைகள் அல்லர். வேதாகமத்தின் தேவன், தம்முடைய இயல்பிலிருந்தும் நோக்கத்தில் இருந்தும் மாறாமல், முற்றிலும் தனிநபர் ஆனவர். வேதாகமம் மெய்யான, அன்பான தேவனைப் பற்றி குறிப்பிடும்போது, தனிநபருக்கான பிரதி பெயர்ச் சொற்களாக குறிப்பிடுவதால், இந்த உண்மையை அறிகிறோம்.
B நாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டதால் பார்க்க (ஆதியாகமம் 1:27) நாம் தேவன் எப்படி இருப்பார் என்பதற்கு நம்முடைய தனிப்பட்ட சாயலைக் கொண்டு தேவனுடைய தெய்வீக தன்மையை உணர முற்படுகிறோம். நம் குறைகளை நீக்கி நாம் தேவனை பற்றி அறிந்தவற்றை மிகைப்படுத்தி எல்லையற்ற நிலையில் வைத்தால், நாம் தேவனுடைய குற்றமற்ற தனிநபர் தன்மையை அறிந்து கொள்ள தொடங்குகிறோம். மெய்யான மற்றும் உயிருடன் வாழ்கிற தேவன் உணர்வுள்ளவர். அவர் நம்மை போன்றே உணர்வுகளின் வெளிப்பாடு உள்ளவர். அவர் நகைப்பார் (சங்கீதம் 2:4), அவர் மனஸ்தாபப்பட்டார் (ஆதியாகமம் 6:6), அவர் வெறுக்கிறார் (சங்கீதம் 5:5) அவர் உருக்கமும் இரக்கமும் உள்ளவர் (சங்கீதம் 103:8).
Sவேதாகமம் தேவன் நித்தியமானவர், பரிசுத்தர், நீதியுள்ளவர், நன்மை செய்கிறவர், ஞானமுள்ளவர், சர்வவல்லவர் மற்றும் நேசிப்பவர் என்கிறது. அவர் நேசிப்பதால், அவர் இரக்கம் உள்ளவர். அந்த பெயர் உரிச்சொற்கள், அடைமொழிகள் தேவனுடைய தெய்வீக குணங்களை குறிக்கின்றன. அது நாம் இரக்கமுள்ள மனிதனின் குணத்தை நினைப்பது போல இருக்கிறது. தேவனின் இரக்கத்தை நீக்கிவிட்டு பார்த்தால் தேவனாய் அல்லாமல் தனிநபரின் தேவனாக ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு அவர்களிடம் தொடர்பு கொண்டவர். தேவனின் இரக்கத்தை நீக்கிவிட்டு பார்த்தால் தேவன் நம்மை போன்றே மகிழ்ச்சி, விசனம், துன்பம், இரக்கம், அன்பு போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறார். தேவனின் இயல்பிலிருந்து இரக்கத்தை நீக்கிவிட்டு பார்த்தால், வேதாகமத்தை மறுபடி எழுத வேண்டும் ஆனால், தெய்வீக இயல்பை பற்றி நம் புரிதல் திருத்தப்பட்டால் இறையியல் தலைகீழாகிவிடும். ஆனால் இரக்கம் நீக்கிவிட முடியாதது. தேவனுடைய குணநலன்களில் முக்கியமான இடம் பெற்றுள்ளது. அவர் அன்பான, கவனிக்கிற தேவன். அதனால் பழைய ஏற்பாட்டின் தேவனுடைய வெளிப்பாடு இயேசு என்பதால் அவர் இரக்கமே உருவாய் திகழ்கிறார்.
Aஇதோ, பொறுமையாய் இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்! கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமும் உள்ளவராய் இருக்கிறாரே. (யாக்கோபு 5:11).
பழைய ஏற்பாட்டின் விசுவாசிகள் தேவனுடைய செயல்கள் மற்றும் உறுதி மொழிகளாலும் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க கற்பிக்கப்பட்டனர். தேவனுடைய இரக்கம் பற்றி பழைய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் வெளிச்சமிட்டு உள்ளார்கள். தாவீது இராஜா தம்முடைய ஜெபத்தில், “ஆனாலும் ஆண்டவரே, நீர் மன உருக்கமும் இரக்கமும் நீடிய பொறுமையும் பூரண கிருபையும் சத்தியமும் உள்ள தேவன்” (சங்கீதம் 86:15) ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார்: “இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னை சேர்த்துக் கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன். ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்… மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். ” (ஏசாயா 54: 7-10). மேலும் தீர்க்கதரிசி மீகா எழுதினார், “அவர் திரும்ப நம்மேல் இரங்குவார் நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். இவை போன்று வேதாகமத்தில் உள்ளவை தேவ மக்களுக்கு, தேவனுடைய இருதயம் பற்றிய ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துகின்றன.
ஷாலோமில் வாழ்வது:
ஆதியிலே தேவன் முழுமையான உலகத்தையும் சமாதானத்தையும் நிறுவினார். ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமையினால், அந்த உலகம் ஒருமுறை தகர்க்கப் பட்டதால், தேவன் சமாதான நிலையை ஷாலோமை தம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமான இஸ்ரவேல் மூலம் புனர்நிர்மாணம் செய்ய தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேல் தேவனுடைய இரக்கத்தின் சட்டத்திற்கு கீழ்படிந்திருந்தால், பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவர்கள் வாழ்வு மிக மகிழ்ச்சியான இடமாக நம் விழுந்த உலகில் இருந்திருக்கும்.
“சமாதானம்” என்பதற்கு எபிரேய வார்த்தை “ஷாலோம்” என்பது ஆழ்ந்த பொருள் கொண்டதால், அது மொழிபெயர்க்க முடியாமல் இருக்கிறது. சங்கீதக்காரர் சங்கீதம் 85:10ல் கண்ட தரிசனப் படி, இந்த சமூகம் ஷாலோம் சமூகமாக வாழ்வின் ஒர் ஒழுங்காய் மகிழ்ச்சியும் நீதியும் பக்தியும் மிகுதியும் அன்பும் கவனிப்பும் நிறைந்ததாய் இருக்கும். ஆனால் தேவமக்கள் தேவனுடைய அன்பான உயர்ந்த லட்சியத்தை அடைவதில் தோற்றனர். ஏசாயா நீதி மற்றும் ஆவிக்குரிய நோயினால் பீடிக்கப்பட்ட கீழ்ப்படியாத தேசத்தை பற்றி விவரிக்கிறார். (ஏசாயா 1:5-7) தேவனுடைய தண்டனை வருத்தமான கிருபையில் இஸ்ரவேல் மீண்டும் மீண்டும் அடங்கியது.
அந்த தேசம் 450 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பினும், இஸ்ரவேல் தேசம் படையெடுத்து வந்த மற்ற இராஜ்ஜியங்களால் கைப்பற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான தேவ மக்களை அடுத்த நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு சென்றனர். ஆனால் தேவனின் இரக்கத்தால் மீதி நாடு கடத்தப்பட்ட இஸ்ரவேல் மக்கள் மீண்டு வந்தனர். அவர்கள் தங்கள் முற்பிதாக்கள் செய்த பாவத்தை செய்யவில்லை. சட்டரீதியான நீண்டகாலம் நானூறு கிமு முதல் 400 கிபி வரை தொடர்ந்தது. ரபீக்களில் பெரும்பாலானோர் பக்தியுடைய படித்தவர்கள், விதிகளையும் சட்டங்களையும் உருவாக்கினர். முதலில், போதனைகள் வாய் மூலமாக செல்லப்பட்டு பிறகு அவை எழுதப்பட்டன. வாழ்வு தரும் சட்டங்கள் முன்பு மகிழ்ச்சியை கொடுத்தன, ஆவிக்குரிய தெளிவைத் தரும் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதம் தந்தன. (சங்கீதம் 119). அவை பின் சடங்காச்சாரமாய் மாறியதை இயேசுவே கண்டனம் செய்தார். (மத்தேயு 23: 13-14)
நிச்சயமாய் சட்ட வல்லுனர்கள், ரபீக்கள் மத போதகர்கள் மற்றும் வேதபாரகர்கள் ஆவிக்குரிய தேவனுடைய பணியாளர்களாய் அறிவித்து பயிற்சி செய்தனர் மீகா 6:8 “மனுஷனே நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம் செய்து இரக்கத்தை சிநேகித்து உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறு என்னத்தை கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” அதை போல அநேக இஸ்ரவேலர்கள் தேவபக்தி மற்றும் நல்லொழுக்கத்தின் உதாரணங்களாய் திகழ்ந்து தேவனை நேசித்து அயலாருக்கு நன்மை செய்தனர். மொத்தமாக யூத மக்கள் ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கு கீழும் மற்றும் பரிசேயர்களின் விதிமுறைகளாலும் தங்கள் வாழ்வையே பெரும் சுமையாக எண்ணினர். பொருளாதாரரீதியாக ஏழ்மையிலும் ஆவிக்குரிய அறியாமையிலும் அவர்கள் “அலைக்கழிக்கப்பட்டு” உதவியற்றவர்களாய் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல” (மத்தேயு 9:36). இருப்பினும், இந்த குழப்பமான சூழ்நிலையில் இயேசு இரக்கத்தின் தேவனாய், தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தார். அவர் தம்முடைய ஊழியத்தில் அக்கறையை மையமாய் வைத்து இருந்தார். சட்டபூர்வமான திரித்து கூறுதலையும் மக்களின் கலாச்சார வரை முறைகளையும் ஒதுக்கிவிட்டு அனைத்தும் உள்ளடக்கிய தேவ கிருபையை நோக்கி எண்ணத்தை குவித்தார். யூதராக பிறந்து பக்தியான யூதராய் பயிற்சி செய்து, கிறிஸ்து அவருடைய பரலோகப் பிதா, பழைய ஏற்பாட்டின் தேவன் இரக்கத்தின் தேவன் என அறிவார். நம் இரட்சகர், எஜமான், இரக்கமுள்ள அண்டை அயலார் அன்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். அதைப்பற்றி பவுல் கொரிந்தியருக்கு (1 கொரிந்தியர் 13) எல்லா குணங்களிலும் அன்பே மேலானது என்று எழுதினார்.
“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். அன்பு நீடிய சாந்தமும் தயவும் உள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது; இருமாப்பாயிரா