வாசிக்க: அப்போஸ்தலர் 2:1-12

அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. (வச. 2).

எங்கள் பகுதியில் அக்டோபர் மாதத்தில், வெப்பநிலை குறைய ஆரம்பித்து, பல மரங்களின் இலைகள் பளபளப்பாக மாறியது. மரங்கள் இலையுதிர்கால மகிமையால் என்னைக் கவர்ந்தது. இலைகள் ஆழமான சிவப்பு, பிரகாசமான மஞ்சள், மென்மையான ஆரஞ்சு நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களுக்கிடையே கலந்து அழகாக இருந்தது. அதையெல்லாம் மனத்திரையில் கொண்டு வர, மரங்களின் தோப்புக்கு நடுவே விழுந்தேன். பிறகு இலைகளின் படுக்கையில் படுத்து நீல வானத்தைப் பார்த்தேன். குளிர்ந்த இலையுதிர் காற்றில் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்த, இயற்கையான தேவாலயத்திற்குள் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.

மரங்கள் ஆடும்போது, இலைகள் சலசலக்கும் போது, யோவான் 3:8-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்தது: “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்”. பின்னர், அப்போஸ்தலர் 2:2-ல் உள்ள லூக்காவின் விளக்கம் நினைவுக்கு வந்தது: “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று”.

அப்பொழுது நடந்தது போல, பரிசுத்த ஆவியானவர் ஒரு புதிய வழியில் என் வாழ்க்கையில் செயல்பட வேண்டும் என்று நான் ஜெபித்தேன் . அதே அற்புதமான வழியில் மக்கள் இயேசுவை விசுவாசிக்கும் போது, அவர்களின் வாழ்க்கையில் அவர் ஊடுருவிச் செல்கிறார் (வச. 4).

தேவன் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்ய பரிசுத்த ஆவியின் வல்லமை எனக்கு மிகவும் தேவை. என்னை வழிநடத்தவும் எனக்கு அவர் தேவை. ஏனென்றால் எனது சொந்த சக்தியில், எனது வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி தேவனின் வேலையை செய்யக் கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், “தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது” (1 கொரிந்தியர் 4:20). பரிசுத்த ஆவியின் செயலுக்கு நாம் அடிபணியும்போது, நாமும், நம்மூலமாக மற்றவர்களின் வாழ்க்கையும் மாற்றம் பெறும். மேலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்லமையால் நாம் நிரம்பியுள்ளோம்.அது நம்மில் கிரியை செய்து தேவனையும், மற்றவர்களையும் இன்னும் அதிகமாக நேசிக்க நம்மை அனுமதிக்கும்.

மார்லினா கிரேவ்ஸ்

மேலும்

அப்போஸ்தலர் 1:8ஐப் படித்து, நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது என்ன நடக்கும் என்பதைக் கவனியுங்கள்.

அடுத்து

உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில், தேவனின் வல்லமைக்குப் பதிலாக, உங்கள் சொந்த பலத்தில் வேலை செய்துள்ளீர்கள்? பரிசுத்த ஆவியின் வல்லமையை, எப்படி உங்களையும், இயேசுவுக்கான உங்கள் சாட்சியையும் மாற்ற முடியும்?