இதற்காகவே நான் இயேசுவை உடையவனாக இருக்கிறேன்
நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத காலங்களே கிடையாது. ஆனால் சில சமயங்களில் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும்.
1994ல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையின் போது ரோஸ் என்ற பெண்ணையும் அவளது இரு சிறு மகள்களையும் தவிர, அனைத்து குடும்ப அங்கத்தினர்களும் கொலை செய்யப்படுவதைப்பார்த்தாள். இப்பொழுது அங்கு இருக்கும் பல விதவைகள் மத்தியில் இவளும் ஒரு விதவையாகக் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறாள். ஆனால் தோற்கடிக்கப்படுவதற்கு அவள் இடம் கொடுக்கவில்லை. மேலும் இரு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்தாள். 5 பேருள்ள அவளது குடும்பத்தினரைப்…
இவ்விதமாய் அன்புகூர்ந்த தேவன்
முதல் உலகப்போர் ஆரம்பத்தின் நூறாம் ஆண்டு நினைவு நாள் பிரிட்டனில் 2014 ஜூலை 28ல் நினைவு கூரப்பட்டது. பிரிட்டனில் அநேக ஊடகங்களில் அநேக விவாதங்கள் குறுந்திரைப் படங்கள் மூலம் 4 ஆண்டுகள் நடந்த போரைப் பற்றி நினைவுபடுத்தின. உண்மையாகவே லண்டனில் இருந்த ஒரு பல்பொருள் அங்காடி பற்றி திரு. செல்ஃப்ரிட்ஜ் என்ற ஒளிப்பட நிகழ்ச்சி 1914ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை விளக்கிற்று. அதில் தரைப்படையில் சேருவதற்கென்று இளம் வாலிபர்கள் தன்னார்வத்துடன் வரிசையில் நிற்பது காண்பிக்கப்பட்டது. தங்களையே தியாகம் செய்த அந்த வாலிபர்களை எண்ணின பொழுது…