ரோமருடைய சமாதானம்
யுத்தத்திற்கான கிரயத்தை யாராலும் செலுத்த இயலாது. 64 தேசங்கள் இப்பொழுது ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு இணையதளம் அறிவித்துள்ளது. அவை எப்பொழுது எவ்வாறு முடியும்? நாம் சமாதானத்தை விரும்புகிறோம், ஆனால் நீதியை விலைக்கிரயம் செலுத்தி அல்ல.
இயேசு சமாதானக் காலத்தில் பிறந்தார். ஆனால் அந்த சமாதானம் வன்முறையினாலும் அடக்கு முறையினாலும் ஏற்படுத்தப்பட்டது. ரோமர்கள் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்களை அடக்கு முறையினால் ஒழித்துக் கட்டினதினால், ரோமர்களின் ஆட்சியில் சமாதானம் இருந்தது.
சமாதானம் இருந்தது போல காணப்பட்ட அந்த நாட்களுக்கு, ஏழுநூற்றாண்டுகளுக்கு முன்பு,…