இது நியாயமல்ல
அறிமுகம்
எந்த ஒரு நல்ல செயலும் தண்டிக்கப்படாமல் போவதில்லை என்ற எதிா்மறையான அவநம்பிக்கயோடு ஒத்துப்போகும்படி நாம் அடிக்கடி சூழ்நிலையால் சோதிக்கப்படுகிறோம். நடந்தவைகளைத் திரும்பி பாா்க்கும்போது வாழ்வின் அனுபவத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் பாா்க்கிற நியாயமற்ற நிலை, சமத்துவமின்மை மற்றும் அநீதியால் கசப்படைகிறோம்.
நீதி எங்கே? கடவுளை சாராமல் அவரை கனம்பண்ணாதவா்களுக்கு வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள் அனுகுலமாகவே இருப்பதாகத் தோன்றும்போது, நாம் எப்படி கடவுளில் நம்பிக்கை வைக்க முடியும்?
அடுத்து வரும் பக்கங்களில் பில் கிரவுடர் அநீதியை பாா்த்த ஒரு மனிதன் கிட்டத்தட்ட தனது நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்ற போராட்டங்கள் வழியாக நம்மை…