நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8:12

அந்த ஓட்டல் அருமையாக இருந்தது. ஆனால் இருட்டாயிருந்தது. ஒவ்வொரு மேஜையிலும் ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அங்கேயிருந்த உணவுபட்டியல்களை பார்த்து உணவை ஆர்டர் செய்வதற்கும், தன்னோடு உணவருந்த வந்தவர்களின் முகங்களை அடையாளம் காண்பதற்கும், தங்களுடைய உணவை பார்த்து உண்ணுவதற்கும் தங்கள் மொபைல் போனிலிருந்த வெளிச்சத்தை மக்கள் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது.

கடைசியாக, ஒருவர் தன்னுடைய நாற்காலியை நகர்த்திக்கொண்டு அங்கிருந்த பணியாளரிடம், “நீங்கள் சற்று மின் விளக்குகளை இயக்க முடியுமா?” என்று கேட்டார். விளக்குகளை இயக்கிய மாத்திரத்தில், மக்கள் சிரிப்பொலிகளுடன் மகிழ்ச்சியடைந்தனர். அதற்கு பின்பு மகிழ்ச்சியோடு மற்றவர்களுடன் பேச ஆரம்பித்தனர். நன்றிகளை பகிர்ந்தனர். என்னுடைய சிநேகிதியின் கணவர் தன்னுடைய மொபைலை அணைத்துவிட்டு, தன்னுடைய தட்டை கையில் எடுத்துக்கொண்டு, “வெளிச்சம் உண்டாகக்கடவது! நாம் இப்போது சாப்பிடுவோம்” என்று எங்களிடம் கூறினார்.

எங்களுடைய மங்கிய மாலைப்பொழுது, ஸ்விட்சை போட்ட மாத்திரத்தில் ஒளிரும் பண்டிகையாய் மாறியது. ஆனால் மெய்யான ஒளி எங்கிருந்து வருகிறது என்பதை நாம் கண்டறிவது எந்த அளவுக்கு முக்கியமானது. தேவன் உலகத்தை உண்டாக்கிய முதலாம் நாளில், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார், வெளிச்சம் உண்டானது (ஆதியாகமம் 1:3). பின்பாட்ரிசியா ரேபோன்பு அந்த “வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (வச. 4).

வெளிச்சம் என்பது நம் மீதான தேவனுடைய அன்பை பிரதிபலிக்கிறது. அவருடைய வெளிச்சமானது இருளின் ஆதிக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றும் உலகத்தின் ஒளியான (யோவான் 8:12) இயேசுவைக் குறிக்கிறது. அவருடைய ஒளியில் நடக்கும்போது, குமாரனை மகிமைப்படுத்தும் பிரகாசமான பாதையில் நாம் நடக்கக்கூடும். அவரே உலகத்தின் பிரகாசமான பரிசு. அவருடைய ஒளி பிரகாசிக்கும்போது, அந்த வெளிச்சத்தின் பாதையில் நாமும் நடப்போம். பாட்ரிசியா ரேபோன்

இயேசு பிறந்துபோது நமக்கு நம்பிக்கையும் பிறந்தது. மேக்ஸ் லுகாடோ

இயேசுவே ஆவிக்குரிய வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒளி. அவரே ஜீவ ஒளி. அவரைத் தவிர அதை வேறு யாராலும் சொல்லமுடியாது. டோனி இவான்ஸ்

நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5

நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3:4-5

இயேசுவே உங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தி வழிநடத்தும் ஒளியானவர். எடித் ஸ்காஃபெர்

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 1 யோவான் 1:5

புதிய ஒளியையும், வாழ்வையும், உதவியையும் நமக்கு கொண்டுவரும் மேசியாவை நாம் எதிர்பார்த்து அனுபவிப்போம். பாட்ரிசியா ரோபோன்

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. ஏசாயா 9:2

யார் கிறிஸ்மஸில் சேர்க்கப்படலாம்? தேவன் இவ்வளவாய் இவ்வுலகத்தில் அன்புகூர்ந்தார் என்பதே நேர்த்தியான நோக்கம். அவருடைய ஒரேபேறான குமாரனை கொடுத்ததே நேர்த்தியான பரிசு. அவரை விசுவாசிப்பதே நமக்கு முன்வைக்கப்பட்ட ஒரே தகுதி. நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதே உங்கள் விசுவாசத்தின் வெகுமதி. கோரி டென் பூம்.

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். 2 கொரிந்தியர் 4:6

உங்கள் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையில் கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அவருடைய ஒளி உங்களை எப்போது வழிநடத்தியது?

அன்பான தேவனே, உலகத்தின் ஒளியும் அன்பின் வழிநடத்தும் ஒளியுமான இயேசுவுக்காய் உமக்கு நன்றி.

ஆதியாகமம் 1:1-5

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.