வளர வேண்டிய நேரம்
டெபியின் புதிய வீட்டில் அவர் நிராகரிக்கப்பட்ட செடியான – ஒரு மோத் ஆர்சர்டை கண்டுபிடித்தார். இச்செடியில் பூ பூக்கும் தண்டுகள் முளைத்தால் எத்தனை அழகாக இருக்கும் என்று கற்பனை செய்தார். ஜன்னலில் ஓரிடத்தில் பூந்தொட்டியை நகர்த்தினார். காய்ந்த சருகுகளை வெட்டி நீக்கி தண்ணீர் விட்டு உரமிட்டார். வாரக் கணக்காக புதிய தண்டுகள் முளைத்தனவா என்று செடியை சோதித்தார். இன்னொரு மாத காலம் அவகாசம் தரலாம் என்று நினைத்தார். தம் கணவரிடம் அதற்குள் எதுவும் வளரவில்லை என்றால் அதை வெளியே எறிந்து விடுவேன்” என்றார்.
அந்த தீர்மானிக்கப்பட்ட நாள் வந்தபோது, அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. இரண்டு சிறு தண்டுகள் இலைகளின் மத்தியில் முளைத்தன! அந்த செடி இன்னும் உயிரோடு இருக்கிறது.
உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியின் குறைபாட்டால் நீங்கள் ஊக்கமின்மை அடைகிறீர்களா? ஒருவேளை நீங்கள் அடிக்கடி நிதானத்தை இழக்கலாம் அல்லது கிசுகிசுக்களை இரசிக்கலாம். அல்லது ஒருவேளை ஜெபத்தையும் வேத வாசிப்பையும் ஒரு சமயத்தில் புறக்கணிக்கலாம்.
உங்கள் வாழ்வின் ஆவிக்குரிய வளர்ச்சி பெற வேண்டிய பகுதிகளை பற்றி நம்பகத்துக்குரிய நண்பரிடம் சொல்லி, அவரை ஜெபிக்க சொல்லி கேட்கலாம் மற்றும் உங்களைப் பொறுப்புள்ளவராய் ஊக்கப்படுத்தலாம் அல்லவா? பொறுமையாய் இருங்கள். பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குள் கிரியை செய்ய அனுமதித்தால் நீங்கள் வளருவீர்கள்.
மரியோன்
|
|
|