மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மத்தேயு 6:1

உடல் ஊனமுற்ற வயோதிபரான கிறிஸ்டோபருக்கு, அன்றாட நடவடிக்கைகளே மிகவும் சவாலானதாக மாறியது, அதனை முடிப்பதற்கு அதிக நேரம் எடுப்பது அவரது வலியை மேலும் அதிகரித்தது. இருப்பினும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் சிறப்பாகச் செய்தார். அவர் ஒவ்வொரு வாரமும் இயந்திரத்தைப் பயன்படுத்தி புல்வெளியை வெட்டி சமப்படுத்துவதை வழிப்போக்கர்கள் பார்த்து செல்வர்.

ஓர்நாள், கிறிஸ்டோபர்முகவரியில்லாத ஓர் நன்கொடையாளரிடமிருந்து கடிதம் மற்றும் விலையுயர்ந்த நகரும் புல்வெட்டும் இயந்திரத்தைப் பெற்றார். தேவைகளோடு இருக்கும் ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் ரகசியமாக உதவ எண்ணுபவர் திருப்தி அடைவர்.

நம்முடைய தான தர்மங்கள் அனைத்தும் இரகசியமாக இருக்க வேண்டும் என்று இயேசு கூறவில்லை, ஆனால் நாம் கொடுக்கும் போது நமது நோக்கங்களைச் சரிபார்க்கும்படி அவர்நினைவூட்டுகிறார் (மத்தேயு 6:1). மேலும் அவர்: “நீங்கள் தர்மம் செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல், உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே” (வச. 2). நாம் வெளிப்படையாகக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும் அதேவேளையில் மனிதர்கள் முன் பாராட்டுகள் அல்லது சிறப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நல்ல செயல்களைச் செய்வதைத் தவிர்க்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 3).

நம்மிடம் உள்ள அனைத்துமே தேவனிடமிருந்து வந்தவை என்பதை நாம் உணரும்போது, நம்முடைய தானதர்மங்களினிமித்தம் நமது முதுகைத் தட்டி மற்றவர்களின் பாராட்டைப் பெறவேண்டிய தேவையில்லை. அனைத்தையும் நன்றாய் அறிந்த பரம நன்கொடையாளர் தம்முடைய மக்களின் உண்மையான தாராள மனப்பான்மையில் மகிழ்ச்சியடைகிறார். அவர் நம்மை ஏற்றுக்கொண்ட வெகுமதியைவிட பெரியது ஏதுமில்லை.

– சோச்சில்டிக்ஸன்

சிந்தனை

வேறொருவர் இரகசியமாக கொடுத்ததன் மூலம் தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவினார்? இன்று நீங்கள் இரகசியமாகயாருக்குக் கொடுத்து உதவ முடியும்?
அன்புள்ள தேவனே, நீங்கள் எனக்குக் கொடுத்ததுபோல் தன்னலமின்றி தியாகத்தோடு உதவிசெய்ய எனக்கு வாய்ப்புகளை வழங்குங்கள்.

 

 

 

banner image