ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருங்கள் எபேசியர் 4:32

நான் சிறுவயதில் இருந்தபோது, எல். ஃபிராங்க் பாமின் லேண்ட் ஆஃப் ஓஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். நான் சமீபத்தில் அனைத்து அசல் கலைப்படைப்புகளுடன் ரிங்கிடிங்- இன் ஓஸ் ஐப் பார்த்தேன். பாமின் ஒரு அடக்க முடியாத, நல்ல உள்ளம் கொண்ட மன்னன். ரிங்கிடிங்கின் உண்மையான நற்குணங்களைக் கண்டு நான் மீண்டும் சிரித்தேன். “அவரது இதயம் கனிவாகவும் மென்மையாகவும் இருந்தது. அது ஞானமாக இருப்பதை விட சிறந்தது.” என்று இளம் இளவரசர் இங்கா அவரை சிறப்பாக விவரித்தார்.

எவ்வளவு எளிமையானது, எவ்வளவு விவேகமானது! ஆயினும் நமக்குப் பிரியமான ஒருவரின் இதயத்தை ஒரு கடுமையான வார்த்தையால் காயப்படுத்தாதவர் யார்? அவ்வாறு செய்வதன் மூலம், அந்த நேரத்தின் சாமாதானத்தையும் அமைதியையும் சீர்குலைத்து, நாம் நேசிப்பவர்களுக்கு நாம் செய்த பல நன்மைகளைச் அவர்கள் அனுபவிக்க முடியாத படி செய்து விட முடியும். 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளரான ஹன்னா மோர், “ஒரு சிறிய தயவற்ற செயல், பெரும் குற்றமாகும்,” என்று கூறியுள்ளார்.

இதோ ஒரு நல்ல செய்தி: யார் வேண்டுமானாலும் தயவுள்ளவராக மாறலாம். நாம் ஊக்கமளிக்கும் பிரசங்கத்தை பிரசங்கிக்கவோ, கடினமான கேள்விகளை கையாளவோ அல்லது அதிக ஜனகூட்டத்திற்கு சுவிஷேசத்தை பிரசங்கிக்கவோ திறமையற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் தயவுடன் இருக்க முடியும்.

இது எப்படி சாத்தியமாகும்? ஜெபத்தின் மூலம் மட்டுமே. நமது இதயத்தை மென்மையாக்க அதுவே வழி. “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்” (சங்கீதம் 141:3-4).

அன்பு குளிர்ச்சியாகிவிட்ட உலகில், தேவனின் இதயத்திலிருந்து வரும் தயவு, நாம் மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய விஷயங்களில் மிகவும் பயனுள்ளதும், குணப்படுத்தும் காரியத்தில் ஒன்றாகும்.

ஆசிரியர் : டேவிட் ஹெச். ரொப்பர்

சிந்தனை

தேவன் என்னை எல்லா வரம்புகளுக்கும் அப்பால் நேசித்திருக்கிறார் என்ற அறிவு, உலகிற்குச் சென்று மற்றவர்களையும் அதே வழியில் நேசிக்க என்னை கட்டாயப்படுத்தும். ஓஸ்வால்ட் சேம்பர்ஸ்.
ஆண்டவரே, நான் ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபப்படும் போது என்னை மன்னியும். என் இதயத்தை மென்மையாக்கி, மற்றவர்களை ஊக்குவிக்க என் வார்த்தைகளைப் பயன்படுத்த உதவும்.

 

 

 

banner image