வாசிக்கவும்: எபேசியர் 4:25-32
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (எபேசியர் 4:29)
மகிழ்ச்சியான திருமணத்திற்கு நல்ல தொடர்பு அவசியம். கவிஞர் ஆக்டன் நாஷ், எவ்வாறு திறம்பட தொடர்புகொள்வது என்பதை நினைவில்கொள்ள உதவும் ஓர் சூத்திரத்தை தெரிவிக்கிறார். நாஷ் தனது நகைச்சுவையான பாணியில் எழுதினார்:
உங்கள் திருமணம் சில்லிட வேண்டும் என்றால்
அன்பான செய்கையால் நேசத்துடன்,
நீங்கள் தவறு செய்யும் போதெல்லாம், அதை ஒப்புக் கொள்ளுங்கள்;
நீங்கள் சொல்வது சரியாக இருப்பின், அமைதலாயிருங்கள்!
இந்த நான்கு வரிகளில் வேதாகமத்தால் ஆதரிக்கப்படும் சில மிகவும் பயனுள்ள உண்மை உள்ளது. இரண்டு முக்கிய புள்ளிகளைப் பார்ப்போம். முதலில், நாம் தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். திருமணம் மட்டுமல்ல, எல்லா உறவுகளும் இந்த வகையான நேர்மையிலிருந்து பயனடைகின்றன (நீதிமொழிகள் 12:22). நாம் தவறு செய்யும்போது நம்மைப் பாதுகாத்துக்கொள்வது தீர்வை சாத்தியமற்றதாக்குகிறது.
மறுபுறம், நாம் எப்போதும் சரியானவர்கள்தான் என்ற எண்ணத்தில், நாம் தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை நம் மனைவிக்கு தெரியப்படுத்த பயப்படுவதால், நாம் வாழ்வது கடினமாக இருக்கும். 1 கொரிந்தியர் 13:4இன்படி, “[அன்பு] தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.” எப்பொழுதும் தன்னைத்தானே முதுகில் தட்டிக் கொண்டிருப்பதுபோல் இருக்கும் ஒருவரைச் சுற்றி இருப்பது எவருக்கும் பிடிக்காது.
தேவனைப் பிரியப்படுத்தும் திருமணத்திற்கான இரண்டு எளிய வழிகாட்டுதல்கள்:
தவறை ஒப்புக்கொள்ளுங்கள், சரி என்றால் அமைதியாக இருங்கள். உறவை வலுவாக வைத்திருக்க இது ஓர் சிறந்த வழியாகும்.
-டேவ் பிரானன்
“கண்ணீரை வரவழைக்கும் வார்த்தைகளைப் தவிர்த்து
உங்கள் உதட்டைப் நிதானமாக உபயோகியுங்கள்;
ஆனால் ஆறுதல் வார்த்தைகள் பாராட்டு வார்த்தைகள்,
மற்றும் உற்சாக வார்த்தைகளில் விரைவாக இருங்கள்.”
– லாக்ஸ்
உங்கள் பேச்சு மௌனத்தைவிட சிறந்ததாக இருக்கட்டும்; இல்லையெனில் அமைதியாக இருங்கள்.
|
|
|