வாசிக்கவும்: மத்தேயு 19:1-8

“இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்” (மத்தேயு 19:6)

பாஸ்டர் ஹோவர்ட் சுக்டன் எனக்கும் என் கணவருக்கும் திருமண நிகழ்வை நடத்தியபோது, நாங்கள் ஓர் அதிசயத்தில் பங்கேற்கிறோம் என்று வலியுறுத்தினார். நாங்கள் அவரை விசுவாசித்தோம், ஆனால் இரண்டு பேரையும் ஒன்றாக வைத்திருக்கத் தேவையான அதிசயத்தின் அளவை நாங்கள் புரிந்துகொள்ளவில்லை.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமணம் அல்ல, திருமண பந்தமே உண்மையான அதிசயம் என்பதை நான் உணர்கிறேன். யார் வேண்டுமானாலும் திருமணத்தை நடத்தலாம், ஆனால் தேவனால் மட்டுமே திருமணத்தை உருவாக்க முடியும்.

திருமணத்தின் ஒரு வரையறை “பக்தியுடன் அல்லது பிடிவாதத்துடன் கடைபிடிக்க வேண்டும்” என்பது. சில தம்பதிகளுக்கு, “பக்தி”யை விட “பிடிவாதம்” என்பதே அவர்களின் உறவின் துல்லியமான விளக்கமாகும். விவாகரத்து செய்ய பிடிவாதமாக மறுப்பதைவிட தேவன் நமக்கு சிறந்த ஒன்றை தம் சிந்தையில் வைத்திருக்கிறார். நாம் “ஒரே மாம்சம்” ஆகுமளவிற்கு திருமண பந்தம் மிகவும் வலுவானது.

ஆதாமிலிருந்து ஏவாளை முதன்முதலில் படைத்தபோது எப்படி இருந்ததோ அந்தப்படியே திருமணம் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (ஆதியாகமம் 2:21-24). அதைத்தான் இயேசு பரிசேயர்களிடம், “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரதினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா?” (மத்தேயு 19:3) என்று அவரிடம் கேட்டபோது விளக்கினார். இயேசு, “இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (வச. 5) என்று பதிலளித்தார்.

உங்கள் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்புக்கொடுப்பது உண்மையில் ஒரு நம்பிக்கையின் செயல், அத்தகைய அற்புதங்களில் நம்பிக்கை தேவைப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, தேவன் திருமணங்களை உருவாக்கும் பொருப்பில் இருக்கிறார்.

-ஜூலி அக்கர்மன்

“நன்மையோ அல்லது தீமையோ,”
நாங்கள் உறுதியளிக்கிறோம்,
நோய்கள் மற்றும் பாடுகள் நடுவிலும்;
தேவனின் உதவி மற்றும் கிருபையால்
இந்த வாக்குறுதிகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம்.”
-டி. டிஹான்

ஒரு நல்ல திருமண பந்தத்திற்கு அவை ஓர் சிறந்த திருமணமே என்ற உறுதி தேவை.