banner image

நான் தேவனுடைய மனுஷன் ஆனால் அக்கினி வானத்திலிருந்து இறங்கட்டும். 2 இராஜாக்கள் 1:10

நற்செய்திக்கு மூடப்பட்ட ஒரு நாட்டில் ஆன்ட்ரூ வாழ்கிறார். அவரிடம் உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக வைத்து இருக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு ,அப்படி இல்லை என்றார். அவர் அணிந்திருக்கும் பொத்தான் அவருடைய சபையை விளம்பரம் செய்கிறது. அவர் எப்பொழுதெல்லாம் கைது செய்யப்படுகிறாரோ அப்பொழுது காவலரிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை“ என்பார். ஆன்ட்ரூவுக்கு தைரியம் உண்டு ஏனெனில் அவர் தம் பக்கத்தில் இருப்பவரை அறிவார்.

எலியா மிரட்டலுக்குப் பணியவில்லை. இஸ்ரவேலின் ராஜா 50 சேவகர்களை அனுப்பி கைது செய்யச் சொன்னார் (2 இராஜாக்கள் 1:9). தீர்க்கதரிசிக்கு தேவன் தம் கூட இருப்பார் என்பது தெரியும். அவர் அக்கினியை வானத்திலிருந்து இறக்கிவிட அனைவரையும் அக்கினி பட்சித்தது . ராஜா மறுபடி சேவகர்களை அனுப்ப எலியா மறுபடி அதையே செய்தார் (வசனம். 12). ராஜா மறுபடி மூன்றாந்தரம் சேவகர்களை அனுப்பினார். ஆனால் மூன்றாம்படைப்பிரிவினர் இரண்டு படை பிரிவினருக்கும் நடந்ததைக் கேள்விப்பட்டு இருந்தனர் .தலைவன் எலியாவிடம் தன்னுடைய படை சேவகர்களின் உயிரை காப்பாற்றும் படி வேண்டினான். அவர்கள் மிகவும் பயந்தார்கள். கர்த்தருடைய தூதன் எலியாவிடம் அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்றார் (வ.13 -15 ).

நாம் நம் எதிரிகளின் மீது அக்கினியை இறக்குவதை இயேசுவிரும்பவில்லை. சீடர்கள் சமாரியர்களின் கிராமத்தை அழிக்க அக்கினியை இறக்கலாமா என்று கேட்டதற்கு இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9: 51- 55). நாம் வேறு காலத்தில் வாழ்கிறோம் ஆனால் இயேசு எலியாவின் தைரியத்தை உடையவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்- அவர்கள் மரித்த இரட்சகரை பற்றி அனைவரிடமும் சொல்ல தயாராக இருக்கும்படி விரும்புகிறார். ஒருவர் ஐம்பதை எடுப்பதில் அல்ல, ஆனால் உண்மையில் ஐம்பதில் ஒன்றாவது ஆகும் .இயேசு நாம் தைரியத்துடன் நேசிக்கவும் மற்றவர்களை சென்றடையவும் தேவையானவற்றை வழங்குகிறார்.

சிந்தனை

நீங்கள் தைரியமாக இருக்க தேவையானவற்றை இயேசு எப்படி வழங்குவார்? நீங்கள் எவற்றை அறியவேண்டும் மற்றும் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?

பரிசுத்த ஆவியானவரே, நீங்கள் என்னுள்ளே வாழ்வதற்காக நன்றி. நான் மற்றவர்களிடம் இயேசுவைப் பற்றி சொல்லும் போது என்னை தைரியத்தால் நிரப்பும்.