…இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பு ஆகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7
தேவனின் பிதாத்தன்மையின் இனிதான பார்வையை கவனத்துடன் அணுகுங்கள்: தேவன் மிகவும் கருணையும் அன்பும் நிறைந்தவர். அவர் நம்மை மன்னிப்பார். அந்த எண்ணம் உணர்வை மட்டுமே சார்ந்தது. புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில் எங்கும் காணப்படாதது. கிறிஸ்துவின் சிலுவையை சார்ந்தே தேவன் நம்மை மன்னிக்கிறார். அதை தவிர வேறு ஏதாவது காரணத்தை சார்ந்து மன்னிப்பு என்றால் அது உணர்வற்ற நிந்தனையாகும். கிறிஸ்துவின் சிலுவையை ஆதாரமாகக் கொண்டுதான் தேவன் நம் பாவத்தை மன்னிக்கிறார் மற்றும் அதன் மூலமாக தான் நம்மை ஆதரிக்கிறார். அதை தவிர வேறு வழி இல்லை. நாம் எளிதாக ஏற்கும் மன்னிப்பின் விலை கல்வாரியில் அவர் ஏற்ற வேதனைதான். பாவமன்னிப்பு ,பரிசுத்த ஆவியின் வரங்கள் மற்றும் பரிசுத்தமாதல் ஆகியவற்றை எளிய விசுவாசமாக நினைக்கக்கூடாது. அனைத்தையும் நமக்கு சொந்தமாக்க தேவன் தந்த மகத்தான விலையை மறக்கக்கூடாது .
மன்னிப்பு என்பது தெய்வீக கிருபையின் அற்புதம். கிறிஸ்துவின் சிலுவையே தேவனின் விலை. தேவன் பரிசுத்தமாக இருப்பதால், பாவ மன்னிப்புக்கு விலைக்கிரயம் தேவைப்பட்டது. தேவனுடைய பிதாத்தன்மை பார்வை பாவை நிவாரணத்தை அழிக்குமானால் அதை ஏற்கக் கூடாது. தேவனின் சத்தியம் வெளிப்படுத்துவது என்னவென்றால், பாவ நிவாரணம் இல்லை எனில் மன்னிப்பு இல்லை. அவர் மன்னித்தார் என்றால் அவரே அவரின் தன்மைக்கு எதிராக செயல்படுவார் என்று ஆகி விடும். சிலுவையில் பாவநிவாரண பலியாகிய கிறிஸ்துவின் மூலமாக மட்டும் தான் தேவன் நம்மை மன்னிக்கிறார். தேவனின் மன்னிப்பு இயற்கைக்கு அப்பாற்பட்ட ராஜ்ஜியத்தில் மட்டும்தான் நடைபெற முடியும்.
பாவமன்னிப்பின் அற்புதத்தை பரிசுத்த அனுபவத்துடன் ஒப்பிட்டால், பரிசுத்த அனுபவம் பாவமன்னிப்பின் அற்புதத்தை விட குறைவானதே. பரிசுத்தம் என்பது எளிதான அற்புதமான விளக்கம் அல்லது மனித வாழ்வில் பாவமன்னிப்பின் ஆதாரம். ஆனால் தேவன் அவர் பாவத்தை மன்னித்தார் என்பதே, மனிதனின் ஆழ்ந்த நன்றி ஊற்றை விழிக்க வைக்கும். இதை பவுல் எப்போதும் உணர்ந்திருந்தார். தேவன் உங்களை மன்னிக்க கொடுத்த விலைக்கிரயத்தை உணர்ந்தால், நீங்கள் தேவ அன்பின் பிடிக்குள் கட்டுப்படுத்தப்படுவிர்கள்.