உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத்தாங்குகிறது. சங்கீதம் 63:7–8

பால், லிஃப்ட், ஊசிகள், காளான்கள், பிறப்புகள், தேனீக்கள், மற்றும் தேனீக்களுள்ள கலவை -இவை மாங்க் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் துப்பறியும் மற்றும் தலைப்புக் கதாப்பாத்திரரான திரு. அட்ரியன்மாங்க் என்பவருக்கு ஏற்படும் பல பயங்களுக்கான காரணங்களின் ஓர் பகுதி. ஆனால் அவரும், நீண்டகாலப் போட்டியாளரான ஹரோல்ட் கிரென்ஷாவும் ஓர் காரின் பின்பக்கத்துக்குள் அடைபட்டுக்கொண்டால், மாங்க் தனது பயங்களின் பட்டியலிலுள்ள ஏதேனும் ஒன்றை(க்ளஸ்ட்ரோபோபியா – பூட்டப்பட்ட இடத்தால் ஏற்படும் பீதி) மேற்கொள்ள முனைவார்.

மாங்க் மற்றும் ஹரோல்ட் இருவரும் பீதியில் கோபத்துடன் இருக்கும் போது, மாங்கிற்கு திடீரென ஓன்று தோன்றியது. “நாம் இதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் ஹரோல்டிடம் கூறுகிறார். “இந்த பெட்டி மற்றும் கதவுகள்…இவைகள் நம்மை அடைத்து வைக்கவில்லை; அவைகள் உண்மையில் நம்மைப் பாதுகாக்கின்றன. மேலும், அவைகள் வெளியே உள்ள கெட்ட விஷயங்கள், கிருமிகள், பாம்புகள் மற்றும் ஓசை ஒலிகளிலிருந்து காக்கிறது” என்றார். ஆச்சரியகண்களுடன் ஹரோல்ட் அவர் என்ன சொல்கிறார் என்பதை உணர்ந்து “இந்த இடம் நமது நண்பன்” என்று வியந்து கிசுகிசுக்கிறார்.

சங்கீதம் 63இல், தாவீதுக்கு இதே போன்ற சூழ்நிலை காணப்படுகிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்தில்” இருந்தாலும் தேவனின் வல்லமை, மகிமை மற்றும் அன்பை நினைவு கூரும் போது (வச. 1-3) பாலைவனம் கூட தேவனுடைய கரிசனையுள்ள பாதுகாப்பின் இடமாக மாறும் என்பதை தாவீது அறிந்திருந்தார். பறவைக் குஞ்சுகள் தாயின் சிறகுகளின் செட்டைகளுக்குள் மறைந்து கொள்வது போல், தானும் தேவனைப் பற்றிக்கொள்ளும் போது அந்த தரிசு இடத்திலும்கூட, “நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போல” என் ஆத்துமாவை திருப்தியாக்குவார்(வச. 5), அவர் அன்பின் ஆழத்தையும் வலிமையையும் கண்டறிந்து “ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது” (வச. 3) என்று தாவீது அறிக்கையிடுகிறார்.

– மோனிகா லா ரோஸ்

சிந்தனை

நீங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது தேவனுடைய கரிசனையை எப்போது அனுபவித்தீர்கள்? தற்போதைய எந்தப் போராட்டங்களில் நீங்கள் “தேவனுடைய சிறகுகளின் நிழலில்”வந்தடைய கற்றுக் கொள்ளலாம்?
அன்பான சிருஷ்டிகராய், பராமரிப்பாளராய் மற்றும் பெருகச்செய்பவராய் இருந்து, மிகவும் கடினமான இடங்களிலும் உமது அன்பால் என் இதயத்தில் ஊடுருவி அதனை உமது சிறகுகளின் புகலிடமாக மாற்றியமைப்பதற்காய் நன்றி.

 

 

 

banner image