பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருப்பதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருங்கள். மத்தேயு 5:48

மனிதர்களிடம் நமது எல்லா நடத்தையில் உதாரத்துவமாக இருக்க வேண்டும் என்பதே இந்த வசனங்களில் தேவனின் வாஞ்சை. ஆன்மிக வாழ்வில் இயற்கையோடு ஒன்றி நடப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவங்கள் உள்ளன. சிலரை நாம் விரும்புகிறோம்; வேறு சிலர் விரும்பப்படாதவர்களாயிருப்பர். அத்தகைய விருப்பு வெறுப்புகள் நம் கிறிஸ்தவ வாழ்வினை அசைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தேவனே ஒளியாய் இருப்பதால் நாம் அந்த “ஒளியில் நடக்கும்போது” நம்முடன் சுமூகமான நல்லுறவு இல்லாதவர்களுடன் ஒற்றிணையும்படி அவர் வழி செய்வார்.

நம்முடைய கர்த்தர் நமக்குக் காண்பிக்கும் உதாரணம் ஓர் நல்ல மனிதனுடையதோஅல்லது ஓர் நல்ல கிறிஸ்தவனுடையதோ அல்ல, மாறாக நம் தேவனே. “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரணசற்குணராயிருப்பது போல, நீங்களும் பூரணசற்குணராயிருங்கள்” — கடவுள் உங்களுக்கு வெளிக்காட்டியதை நீங்களும் மற்றவர்களுக்கு காட்டுங்கள்; மேலும் பரலோகத்திலுள்ள நம் தகப்பன் பூரணசற்குணராயிருப்பது போல் நாமும் பூரணசற்குணமானவர்களா என்பதை அறிய நமக்கு ஏராளமான வாய்ப்புகளைவழங்குவார். நாம் அவருடைய சீடராக இருக்கிறோமென்றால், தேவன் மற்றவர்களிடம் செயல்பட்ட விதத்திலேயே நம்மையும் அடையாளப் படுத்துகிறோம். “நான் உங்களை சிநேகிக்கிறதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் சிநேகியுங்கள்…”

கிறிஸ்தவ குணாதிசயங்களின் வெளிப்பாடு நல்ல செயல்களில் அல்ல; தேவனைப் பிரதிபலிப்பதிலுள்ளது. தேவனுடைய ஆவியால் நீங்கள் மாற்றம் பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கையில் மனுஷிக குணாதிசயங்களை விட்டு தெய்வீக பண்புகளை வெளிப்படுத்துவீர்கள். நமக்குள் தேவன் வாசமாயிருப்பதால், நம்மில் உள்ள அவருடைய ஜீவன் தன்னை தெய்வீகமாக இருக்க முயற்சிக்கும் மனித ஜீவனாக அல்லாமல் தேவனுடைய ஜீவனாகவே வெளிப்படுத்துகின்றது. ஓர் கிறிஸ்தவரின் வாழ்வில் அசாத்தியங்கள் சாத்தியமாவதன் ரகசியம் என்னவென்றால் தேவ கிருபையே; இத்தகைய அனுபவங்களை தேவனோடு தொடர்பு கொள்ளும் காலங்களில் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையின் போதும் உணரலாம். சலசலப்பை உருவாக்கும் விஷயங்களை நாம் எதிர்கொள்ளும்போது, அதனை அற்புதமாக சமாளிக்கக்கூடிய ஆற்றல் நமக்கு இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறோம்.

-ஆஸ்வால்ட்சேம்பர்ஸ்

சிந்தனை

எளிமையாக சொல்லவேண்டுமானால் ஓர் பொருள் மக்கிப்போவதைவிட இதயம் விரைவாக சோர்வுறும் – உடல் அழகு, இயற்கையான வாழ்க்கைமுறை, நட்பு வட்டங்கள் போன்ற இவை அனைத்தும் ஓர் மனிதனின் இதயத்தை விரைவாக சோர்வுறச் செய்கின்றன; ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்து அவர் மூலம் வரும் ஒளியை நோக்கும்போது, இவையெல்லாம் நம்மை சோர்வடையச் செய்யாது என்று கூறுகிறார்.

 

 

 

banner image