சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப் பண்ணுகிறீர். சங்கீதம் 4:8

அம்புரோஸ் (கி.பி. 340-397) மிலனின் பிஷப்பான பிறகு, அவர் ஒரு புது வகையான இசையை தேவாலயத்திற்கு அறிமுகப்படுத்தினார். அது கிழக்கு பாணியிலிருந்து கடன் வாங்கப்பட்டது, ஆனால் சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்புதிய இசை அநேகருக்கு பிடித்திருந்தது. அம்புரோசின் பல பாடல்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றின் மொழிபெயர்ப்பு, “நாள் முடிவதற்கு முன்” இவ்வாறு கூறுகிறது:

:“எல்லா கெட்ட கனவுகளுக்கும் எங்களை பாதுகாத்தருளும்.
இரவின் பயங்களுக்கும், கற்பனைகளுக்கும் எங்களை விளக்கியருளும்”.

தேவன் நமக்கு வைத்திருக்கின்ற காரியங்களைஇப்பயங்கள் அச்சுறுத்துவதால், அம்புரோஸ் தனது பாடலில், தூங்கும் போதும் தேவன்நம்மைக் காக்குமாறு குறிப்பிடுகிறார்.

சங்கீதம் 4 ல், தாவீது ராஜா பயத்தில் இருந்தபோதிலும் தூக்கத்தின் கருத்தைக் குறிப்பிடுகிறார். தாவீது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோடும்போது, தேவனிடம் இவ்வாறு மன்றாடுகிறார் ,“நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;எனக்கு இறங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்”(வ.1). இந்த ஆழ்ந்த தனிப்பட்ட வேண்டுகோளுக்குப் பிறகு, தன்னைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை இவ்வாறாக செய்யுமாறு கூறுகிறார்: “உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்”(வ.4).

தன் பயத்தை விட்டுவிட்டு தேவனை நோக்கி இவ்வாறாக முடிக்கிறார்: “சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப் பண்ணுகிறீர்”(சங்கீதம் 4:8). இப்பழமைமிக்கதாவீதின் பாடலும் அம்புரோசின் பாடலும் எப்படிப்பட்ட காரியங்கள் நம்மை பயமுறுத்தினாலும்நம்முடைய சமாதானத்தைஊக்குவிக்கிறதாயிருக்கிறது. அதனால் ஒரு நாள் முடிவடையும்போதுநம்முடைய கவலைகள், பாரங்கள் அனைத்தையும் அவரிடம் சொல்லி, விட்டு விடுவோம்.

எவ்வகையான அச்சுறுத்தல்உன் தூக்கத்தைத் தடை செய்கிறது? உன் கவலைகளை எவ்வாறாக தேவனிடம் கொடுக்க முடியும்?

எவ்வகையான அச்சுறுத்தல்உன் தூக்கத்தைத் தடை செய்கிறது? உன் கவலைகளை எவ்வாறாக தேவனிடம் கொடுக்க முடியும்?

சங்கீதம் 4:1–8

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்கு பதிலருளும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பதைக் கேட்டருளும். மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா). பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா). நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.