இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்(வ. 8). (ரோமர் 12:1-8)

கடந்த ஆண்டு ஒரு சனிக்கிழமையில், எனது குடும்பம் எங்கள் பைக்கில் நகர சந்தைக்கு சென்றது. ஒவ்வொரு வார இறுதியிலும் சந்தை ஒரு கார் நிறுத்துமிடத்தை தெரிந்தெடுத்து, பல்வேறு விற்பனையாளர்களுக்கு விற்பனை சாவடிகளை வழங்குகிறது. கரிம பொருட்கள், சுடப்பட்ட பொருட்கள் மற்றும் கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு கைவினைஞர் உருவாக்கிய கைவினை பொருட்களால்(நகைகள், ஓவியங்கள், மரவேலைகள் மற்றும் பல) இந்த இடம் நிரம்பி இருக்கும்.

என் மகன் ஒரு பிரமாண்டமான மஃபின் மீது கண்களை வைத்தான். அதற்கு பணம் செலுத்தத் தயாராகி, வரிசையில் ஒரு வயதான பெண்ணின் பின்னால் நின்றேன். உயரமான, ஆனால் சற்று குனிந்துவாறு இருந்த அந்த பெண், மங்கிப்போன டெனிம் சட்டையும், நீல நிற ஆடையும் அணிந்திருந்தாள். அவளுடைய வெள்ளி முடி, அவள் தோள்களைத் தொட்டது, அவள் வயதாக இருந்தாலும், குறையாத அழகு உள்ளவளாய் இருந்தாள். மேசையை விட்டு விலக முயல, அந்த வயதான பெண் என்னை நோக்கி திரும்பினாள். அவள் என்னை அறியாமல் பிடித்தாள், நான் உறைந்து போனேன். நாங்கள் நேருக்கு நேர் சந்தித்தோம், 2 அல்லது 3 அங்குலங்கள் மட்டுமே எங்கள் இரண்டு பேருக்கு மத்தியில் இருந்தது. எந்தத் தயக்கமும் இன்றி, அகலமாகச் சிரித்துவிட்டு, என் குறுந்தாடியை நோக்கி விரலைக் காட்டினாள். “என்னே, என்னே,” என்று சொல்லி அவள் சிரித்தாள்.அவளுடைய கனிவான, கரடுமுரடான குரல், ஒரு மெல்லிய சத்தத்தை விட அதிகமாக இல்லை. “அது அழகான மீசை இல்லையா!” என்று சொல்லி கொண்டு என்னை கடந்து சென்றாள்.

அந்த எளிய மனிதப் பரிமாற்றம் அடுத்த சில நாட்களுக்கு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அந்த விலைமதிப்பற்ற பெண் என் முகத்தில் கையை வைப்பது, என் கண்களை அவளது கைகளால் பிடித்துக் கொள்வது, மகிழ்ச்சியுடன் ஒரு வார்த்தை பேசுவது மிகவும் இயல்பான விஷயமாகத் தோன்றியது. பரிசுத்த ஆவியானவரால் உற்சாகப்படுத்தப்பட்ட அத்தகைய எளிய மனிதநேயத்தின், இரக்கத்தின் ஆற்றலை பவுல் அறிந்திருந்தார். ” அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்”, என்று அப்போஸ்தலன் நமக்கு நினைவூட்டுகிறார் (ரோமர் 12:5). நமக்கு ஒருவர் தேவை. நாம் மனித வார்த்தைகள், தொடுதல் மற்றும் இரக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் இது (முதன்மையாக) பிரமாண்டமான, மிகப்பெரிய சைகைகளும், தியாகத்திற்கான அழைப்பு அல்ல. இது எளிமையான தயவும், விருந்தோம்பலும் அன்பான வரவேற்புமாகும்.

“இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்”(வ.8) என்று பவுல் கூறுகிறார். தேவனுடைய தயவு நம் வழியாக மற்றவர்களிடம் பாயட்டும்.

ஆசிரியர்: வின் கோலியர்r

சிந்தனை

ரோமர் 12:9-10ஐ வாசியுங்கள். மற்றவர்களை நேசிப்பது போல் நடிப்பதற்கும் அவர்களை உண்மையாக நேசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ஒருவர் உங்களிடம் உண்மையான தயவை காட்டியபோது, உங்கள் மீது என்ன தாக்கம் ஏற்பட்டது? தேவன் எப்போது தம்முடைய தயவை உங்களுக்கு காட்டினார்? இன்று நீங்கள் எங்கு (யாருக்கு) தயவு காட்டுவீர்கள்?

 

 

 

banner image