சிங்கங்களுடன் வாழ்வது
சிக்காகோ அருங்காட்சியகத்தில் நான் பாபிலோனின் அசல் ஸ்ட்ரைடிங் சிங்கங்களில் ஒன்றை கண்டேன்-ஒரு பயங்கரமான சிறகுகள் கொண்ட சிங்கத்தின் ஒரு பெரிய, சுவர் ஓவியமான உருவப் படத்தைப் பார்த்தேன். பாபிலோனிய காதல் மற்றும் போரின் பாபிலோனிய தெய்வமான இஷ்தாரை அடையாளப்படுத்தும் சிங்கம் பாபிலோனிய வரிசையை ஒத்த 120 சிங்கங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
வரலாற்றாசிரியர்கள் பாபிலோனியர்கள் எருசலேமை தோற்கடித்த பின்பு எபிரேயர்கள் சிறையிருப்பில் நேபுகாத்நேச்சார் ராஜ்ஜியத்தில் இந்த சிங்கங்களை பார்த்திருப்பர். இஸ்ரவேலர்களில் சிலர் இஸ்ரவேல் தேவனை இஷ்தார் தோற்கடித்ததாக நம்பி இருந்திருக்கலாம்.
எபிரேய சிறையிருப்பினரில் ஒருவரான தானியேல், தனது சக இஸ்ரவேலர்களில் சிலரை தொந்தரவு செய்த சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவில்லை.தேவன் மீதான அவரது அர்ப்பணிப்பு நிலையாக இருந்தது. அவர் ஒரு நாளில் மூன்று முறை ஜெபித்தார்- ஜன்னல்களை திறந்து வைத்தபடி –சிங்கங்களின் கெபியில் தள்ளப்படுவோம் என்று அறிந்திருந்தும் கூட. தேவன் பசியோடு இருந்த விலங்குகளிடமிருந்து தானியேலைக் காப்பாற்றிய பிறகு, ராஜா தரியு சொன்னார், “(தானியேலின் தேவன்) ஜீவனுள்ள தேவன்… அவர் தப்புவிக்கிறவருமாய் இருக்கிறார்” (தானியேல் 6: 26-27) தானியேலின் விசுவாசம் பாபிலோனிய தலைவர்களை பாதித்தது.
அழுத்தம் மற்றும் ஊக்கமின்மை இருந்தபோதிலும், தேவனுக்கு விசுவாசமாய் இருப்பது அவரை மகிமைப்படுத்த மற்றவர்களை ஊக்குவிக்கும்.
ஜெனிஃபர்
|
|
|