இப்போழுதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலை நிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத்தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர்கைக்கொள்ளவில்லை. . . .  1 சாமுவேல் 13

ஐயோ . . . நான் இனி சரியானவன் அல்ல” என நானே உள்ளுக்குள் முனகினேன். எங்கள் வீட்டுத்தொலைக்காட்சியை 42-இன்ச் செட்டாக மாற்றிய போது அவ்வாறு எண்ணத் தோன்றியது. நிறம் நன்றாக இருந்தது, ஒலி சரியாக இருந்தது, ஆனால் கீழ் வாசகங்களுக்கு என்ன ஆனது? அவை ஏன் மங்கலாக இருந்தன? ஐயோ! நான் என் 20-20 பார்வையை இழந்துவிட்டேன்! எனது இடதுகண் பார்வை சிறிது சிறிதாக குறைந்து விட்டதாக எனது மருத்துவர் எனக்குத் தெரிவித்தார்.

ஓர் முயற்சியில் சிறியதாக ஏதாவது குறி தவறினால், அதை நாம் வழக்கமாக அப்படியே கைவிடுகிறோம். ஏனென்றால் அதனைச் சமாளிப்பதை விட வெறுமனே விட்டு விடுவது மிகவும் வசதியானது. எவ்வாறாயினும், இந்த மனப்பான்மை, பாவத்தை நாம் கையாளும் போது ஆபத்தானது. இதற்கு சவுல்ஒர் சிறந்த உதாரணம்.

நாம் உண்மையாகவே நமக்கு நேர்மையாக இருந்தால்,சவுலின்செயல்கள் அவ்வளவு மோசமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வோம் (1 சாமுவேல் 10:8, 13.9). மேலோட்டமாகப் பார்த்தால், சாமுவேல் தாமதமாக வந்ததாகவும், யாரேனும் விரைந்து செயல்படாவிட்டால் சவுலும் தேசமும் தப்பிப்பிழைப்பது என்பது சந்தேகமே (1 சாமுவேல் 13:8). சவுல் நிச்சயமாகவே அதனைச் செய்யவல்லவராய்தான் காணப்பட்டார்.

சவுல் செலுத்தின சர்வாங்க தகனபலியில் எது தவறு? (1 சாமுவேல் 13:10-11). சவுல் தனக்கு கொடுக்கப்படாத ஓர் பாத்திரத்தை ஏற்று கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் நேரடியாகக் பலியைச்செலுத்தினார் (1 சாமுவேல் 13:13). கர்த்தருடையவேளைக்காய்க் காத்திருக்காமல், பிரதான ஆசாரியருக்குரிய செயல்பாட்டை தாமே நிறைவேற்றினார் (லேவியராகமம் 6:8-13).

இந்தச் சூழ்நிலை சவுலின் பார்வையில் காணப்படும் குறையை வெளிப்படுத்துகிறது. கர்த்தருக்குக் கீழ்ப்படிவதில் அவருடைய பார்வை முழுமையாக இருக்கவில்லை. அதற்கு அவர் ஏதாவது செய்தாரா? இல்லை. 1 சாமுவேல்15 ல், மற்றுமொரு போர் மற்றும் கீழ்ப்படியாமையின் செயலைப் பற்றி வாசிக்கிறோம். மீண்டும் ஒருமுறை, அவர் தேவபக்தியை ஓர் அரணாகப் பயன்படுத்தினார் (1 சாமுவேல் 15:20). ஆனால் தேவனுடைய வார்த்தையை அறிவிக்கும் சாமுவேல் சவுலைப் பார்த்து, “கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; கர்த்தர் உம்மையும் புறக்கணித்தார்” (1 சாமுவேல் 15:26) என்றார்.

கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் சிறிதும் அசௌகரியமாக இருப்பது போன்ற காரியம் எதுவும் இல்லை. அவருடைய பரிசுத்தத்தைப் பின்பற்றி நடப்போம்.

– சோச்சில்டிக்ஸன்

சிந்தனை

உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த பகுதிகள் கடவுளின் பரிபூரண சித்தத்திற்கு நேராக இருக்க வேண்டும்?
அவரைப் பற்றிய தெளிவான பார்வையை நீங்கள் எவ்வாறு கடைபிடிக்க முடியும்?

 

 

 

banner image