காலமாகிய பரிசு

வாசிக்க: லூக்கா 6:37–38
“உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்”. —நீதிமொழிகள் 11:25

நான் அவசர அவசரமாக தபால் நிலையத்திற்குச் சென்றேன். “செய்ய வேண்டியவை” பட்டியலில் நான் செய்ய வேண்டிய காரியங்கள் பல எனக்கு இருந்தன. ஆனால் நான் உள்ளே நுழையும் போது, கதவு வரை நீண்ட வரிசை இருந்ததைக் கண்டு விரக்தியடைந்தேன்.

நான் என் கையை கதவில் வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருந்தபோது, ஒரு வயதான அறிமுகம் இல்லாதவர் என்னை அணுகினார். “எனக்கு இந்த நகலெடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தத் தெரியவில்லை,” என்று கூறி, எங்களுக்கு பின்னால் இருந்த இயந்திரத்தை சுட்டிக்காட்டினார். “எனது பணத்தை எடுத்துவிட்டது, பிறகு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை நான் உடனடியாக அறிந்து கொண்டேன். நான் வரிசையை விட்டு வெளியேறினேன், பத்து நிமிடங்களில் சிக்கலைச் சரிசெய்ய முடிந்தது.

அந்த மனிதர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். நான் மீண்டும் வரிசையில் வர திரும்பிய போது, அங்கே வரிசையில் யாரும் இல்லை. நேராக சர்வீஸ் கவுண்டருக்கு நடந்தேன்.

அன்றைய எனது அனுபவம் இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டியது: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்”. (லூக்கா 6:38).

தேவன் என் அவசரத்தைத்‌ தடுத்ததால், வரிசையில் காத்திருப்பு குறைத்தது. மற்றவர்களின் தேவைகளுக்கு என் கண்களைத் திருப்பி, என் நேரத்தைக் கொடுத்ததன் மூலம், தேவன் எனக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். அடுத்த முறை அவசரமாக என் கைக்கடிகாரத்தைப் பார்க்கும்போது இது ஒரு பாடமாக இருக்கும்.

-ஜேம்ஸ் பேங்க்ஸ்

 

 

 

banner image