கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது


banner image

கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது

வாசிக்க: லூக்கா 10:38-42
மார்த்தாளோ பற்பல வேலைகளை செய்வதில் மிகவும் வருத்தம் அடைந்து, அவரிடத்தில் வந்து: “ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்கு சொல்லும் என்றாள்”- லூக்கா10:40

மார்த்தாள் இயேசுவுக்கு சேவை செய்யும் போது, அவள் சகோதரி மரியாள் அவரின் பாதத்தில் அமர்ந்து வசனத்தை கேட்டாள். சார்லஸ் ஹெச். ஸபர்ஜன் (1834-92) அந்த சூழ்நிலையை கருத்துரை எழுதினார், “நாம் அதிகமாக சேவை செய்ய வேண்டும் மற்றும் அதே நேரத்தில் அதிகமாக அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு நமக்கு அதிகமாக கிருபை தேவைப்படும். சேவை செய்வது தொடர்பு கொள்வதை விட எளிதானது”.

நான் ஒரு தடவை ஒரு இளந்தாயை சந்தித்தேன். அவர் இரண்டையும் பின்பற்ற கிருபையை கண்டுபிடித்துள்ளார். தேவனையும் அவருடைய வார்த்தையையும் தேடும் பசியுடன் இருந்தார். அத்துடன் குடும்ப வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் மூழ்கியிருந்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவரின் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் காகிதத்தையும் பென்சிலையும் வைத்தார். அவருடைய வீட்டிலேயே நாள்முழுவதும் தேவனுக்கு இடைவிடாமல் சேவை செய்யும் போது தம்மை தேவனுக்கு திறந்துவைத்தார். எப்பொழுதெல்லாம் வசனம் அவர் மனதில் எழுகிறதோ அல்லது அறிக்கையிடுவதோ அல்லது ஜெபக்குறிப்போ அவற்றை பக்கத்தில் இருக்கும் காகிதத்தில் குறித்து வைத்துக் கொள்வார். மாலையில் குழந்தைகள் தூங்கிய பின்பு, எழுதிவைத்த துண்டு காகிதங்களை சேகரித்துக் கொண்டு அவற்றை ஜெபத்துடன் தியானித்தார்.

அவர் மார்த்தாளாகவும் மரியாளாகவும் ஒரே நேரத்தில் வாழும் வழியை கண்டுபிடித்தார். நாமும் அவரைப் போலவே தேவனுக்கு சேவை செய்வதிலும் அவருடன் தொடர்பு கொள்ளும் வழிகளை கண்டுபிடிப்போமாக.

ஜோனி

 

 

banner image