அறியப்படாததைக் குறித்த பயம்
அறிவுக்கு ஒவ்வாததான ஒன்றைச் செய்யும்படி தேவன் எப்போதாவது உங்களிடம் கேட்டிருக்கிறாரா? தெரியாத பகுதிகளுக்கு உங்களை அழைத்துச் சென்றிருக்கிறாரா? நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வை நிராகரிக்குமாறு அல்லது நீண்ட காலமாக எதிர்பார்த்த உறவை எதிர்க்கும்படி அவர் உங்களிடம் கேட்டால் என்ன செய்வீர்கள்? அவர் உங்களை உலகின் தொலைதூர பகுதிக்கு அழைத்தாலோ அல்லது தொலைதூரத்தில் அவருக்கு சேவை செய்ய உங்கள் பிள்ளைகளை அனுப்பும்படி உணர்த்தினாலோ என்ன செய்வீர்கள்?
“எது எப்படி நடக்குமோ” என்பது அறியப்படாததாகவும் நம்மை அசைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இருப்பினும், நாம் அவரைப் பின்தொடரும்போது, அறியப்படாத பகுதிகளை பட்டியலிட தேவன் அடிக்கடி நம்மை அழைக்கிறார். தேவனுடைய கட்டளைகளுக்கிணங்க பிறரை மன்னித்து, நமது பொக்கிஷங்களையெல்லாம் விட்டுக்கொடுத்து, பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் விஷயங்களை விட்டுவிடும் போது, பயம் நிறைந்த பகுதிகளில், வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதறியாது, அநேக நேரங்களில் நாம் இருக்கின்றோம்.
ஆபிரகாமின் முழுக் குடும்பத்தையும், எங்கு கொண்டு போகப் போகிறார் என்று சொல்லாமல், அவரைப் போகும்படி தேவன் சொன்னபோது, எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். (ஆதியாகமம் 12:1-3).
ஒவ்வொரு புதிய நாளும் பெயரிடப்படாத பகுதிக்குள் நுழைவதைப் போன்றது தான். அறியப்படாததைக் குறித்த பயம், வரவிருக்கும் நாட்களில் தேவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்கான நமது ஆற்றலை தடுக்கலாம். ஆனால், ஆபிரகாமைப் போலவே, எல்லாவற்றையும் அறிந்தவரை நாம் பற்றிக்கொள்ளும்போது, அவர் எங்கு நம்மை வழிநடத்தினாலும், நாம் நல்ல கரங்களுக்குள் தான் இருக்கிறோம்.
-ஜோ ஸ்டோவல்
|
|
|