too bad too late

too bad too late

மிகவூம் மோசமானதா? மிகவூம் காலதாமதமா?

இன்றைக்கான வேதாகமப்பகுதி :லூக்கா 23:32–43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் —லூக்கா 23:43

கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் என்பவர், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுடன் ஆர்வத்துடன் விவாதித்துவந்த ஒரு பிரபல்யமான நாத்திகவாதி ஆவார். அவர் புற்றுநோயினால் மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, தான் மரணப்படுக்கையில் இயேசுவிடம் மனந்திரும்பிவிட்டதாக யாராவது கேள்விப்பட்டால், தான் தன் அறிவை இழந்ததற்கு அதுவே ஆதாரம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவித்தார்.

மரணத்தை எதிர்கொள்ளும் தறுவாயில் தான் மனமுடைந்து கிறிஸ்துவிடம் திரும்புவார் என்பதை கிறிஸ்டோபர் அறிந்திருத்ததால், தன்னைப் பின்பற்றுகிறவர்களை முன்கூட்டியே எச்சாpத்தார் என்று அவருடன் எதிர்விவாதம் செய்தவரும் அவருடைய நண்பருமாகிய ஒருவர், கிறிஸ்டோபH இறந்த பின்னH குறிப்பிட்டார். யாருக்குத் தெரியூம்? ஒருவேளை அவர் மனந்திரும்பியிருக்கலாம். ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தரை எதிர்த்துப் போராடினாலும்இ இறுதி சில வினாடிகளில் கிருபையினால் இரட்சிக்கப்படலாம். இது இதற்கு முன்னரும் நடந்திருக்கிறது.

சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வன் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தவன். அவன் தன் சக குற்றவாளியிடம், “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறௌம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறௌம்; ஆனால் இவரோ (இயேசு) தகாததொன்றையூம் நடப்பிக்கவில்லையே” (லூக்கா 23:41) என்று கூறினான். அவனது சரீர வேதனையானது, அவனது மிகப் பெரிய ஆவிக்குரிய தேவையிலிருந்து அவனுடைய கவனத்தைத் திசைதிருப்புகின்ற அச்சுறுத்தலாக இருந்த அந்த மணிநேரங்களில் அவன் தன் இறுதியான தாங்கமுடியாத வேதனையில் இருந்தான்.

மேலும், அவன் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்கிக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில், அவன் இயேசுவைப் பரிகாசம் செய்து, அவமானப்படுத்திய மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டிருந்தான் (மாற்கு 15:32). ஆனால், சிலுவையில் தொங்கிக்கொண்டு மரணத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கையில், அவன் திரும்பி தன் இறுதி வாய்ப்பைப் பார்த்தான். இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்;” (லூக்கா 23:42) என்று கூறினான்.

தங்களுக்கான நேரத்தைக் கடந்துசென்றவர்கள் உட்பட, எல்லா மக்களையூம் இரட்சிப்பதில் கர்த்தர் பிரியப்படுகிறார். நாம் செய்த தவறுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாம் இயேசுவை நோக்கி பார்ப்போம்.

மைக் விட்மர்

உங்களுடைய மிகப்பெரிய மனவருத்தங்கள் எவை?
நீங்கள் மன்னிக்கப்பட முடியாதவர் என்று ஏன் நீங்கள் எண்ணவேண்டும்?

அன்புள்ள இயேசுவே, உம் ஒருவரால் மாத்திரமே என்னை உண்மையாகவே இரட்சிக்கமுடியூம் என்பதால் நான் உம்மை, உம்மை மாத்திரமே பார்க்கிறேன்.