never forsaken

never forsaken

ஒருபோதும் கைவிடப்படுவதில்லை

இன்றைக்கான வேதாகமப்பகுதி :மத்தேயு 27:45–50
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; …என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்… —மத்தேயு 27:46

என் தாத்தா மரணப்படுக்கையில் இருந்தபோது, நான் அவருக்கு விடைகொடுத்துப் பேசுவதற்காக மருத்துவமனைக்கு விரைந்தேன். அங்கே இருந்த கூடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், ஒளிரும் விளக்குகள்இ லினோலியம் தரைஇ ஒரேயொரு தொட்டியில் வைக்கப்பட்ட செடிஇ ஒரு குடும்பப் படம், இப்படியாக அவருடைய அறை மிகவூம் சுத்திகரிக்கப்பட்டதாகக் காணப்பட்டது: அந்த வளாகம் முழுவதும் வினிகர் மற்றும் எலுமிச்சையின் வாசனை வீசியது. இதற்கு முன்னர் ஒருவர் இறப்பதை நான் கண்டதில்லை; ஆனால் அவரது சுவாசத்தில் ஏற்பட்ட மரணத்தின் கரகரப்பான ஓசையை நான் கேட்டதுடன், உள்ளே குழிவிழுந்த அவரது கண்களையூம் நான் கவனித்தேன். நான் அவரிடம் விடைபெற விரும்பினேன். (அவர் சுயநினைவில் இருக்கவில்லை என்றாலும்) இந்த இருண்ட சூழலிலும் அவர் தனிமையில் இல்லை என்பதை அவர் உணரவேண்டுமென நான் விரும்பினேன்.

உங்களுடைய இருண்ட சூழ்நிலையில் தனிமையை உணருவதைவிட மோசமானது வேறு எதுவாக இருக்கமுடியூம்? இருந்தாலும், இயேசுவூம் இந்தத் துயரத்தை உணர்ந்தார். “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயூ 27:46) என்று சிலுவையிலிருந்து அவர் கூக்குரலிட்டார். அவர் கைவிடப்பட்ட தமது சொந்த நிலைமையை மாத்திரமல்ல, மாறாகஇ முழு உலகத்தின் வேதனையையூம் வெளிப்படுத்தினார். கிறிஸ்து இதைக் குறித்து சாதாரணமாக பேசாமல், இஸ்ரவேலின் ஜெபங்களில் ஒன்றையே நினைவூபடுத்தினார் (சங்கீதம் 22:1). தேவன் தங்களைக் கைவிட்டுவிடுவாரோ என்கிற இஸ்ரவேலின் அதே அச்சத்தையே இயேசு இங்கே எதிரொலித்தார்; மேலும் தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் விரக்தியின் தருணங்களில் எதிர்கொள்ளும் அதே அச்சத்தைப் பேசியதன் மூலம் அவர் எங்களுக்காகவூம் ஜெபித்தார். நாம் ஒரு பிள்ளையை இழக்கும்போது அல்லது திருமணம் தோல்வியடையூம்போது, கர்த்தரின் அருகாமை இல்லையோ என்றெண்ணி நாம் அஞ்சுகிறௌம்.

எவ்வாறாயினும், சிலுவையில் இருக்கிற தனிமையான இயேசுவூம், அதன் பின்னர் வரவிருந்த அவரது உயிர்த்தெழுதலுமே நம்முடைய வேதனைக்குப் பதிலளிக்கிறது. நாம் கைவிடப்பட்டதாக உணரலாம், ஆனால் மரணம் என்னும் பள்ளத்தாக்கிலும்கூட கர்த்தர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உண்மையை இயேசு வெளிப்படுத்துகிறார். நாம் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை

வின் கொலியர

எங்கே கைவிடப்பட்டதாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்?
கைவிடப்பட்ட அந்த இடத்தில் கர்த்தர் உங்களை எப்படிச் சந்தித்தார்?

அன்பின் கர்த்தாவே, கைவிடப்பட்ட உணர்வூ என்றால் என்னவென்பதை நான் அறிவேன். நீர் இருப்பதாலே, நான் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நான் அறிகிறேன்.