last words

last words

இறுதி வார்த்தைகள்

இன்றைக்கான வேதாகமப்பகுதி : மாற்கு 15:33–41
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லிஇ ஜீவனைவிட்டார். — லூக்கா 23:46

மார்ட்டின் லூத்தர் மரணப்படுக்கையில் இருந்தபோது, ஒரு போதகர் அவரைத் தட்டி எழுப்பி, “வணக்கத்திற்குரிய பிதாவே, கிறிஸ்துவிலும், நீங்கள் போதித்த போதனைகளிலும் உறுதியாக நிலைத்திருந்து மரிப்பீர்களா?” என்று கேட்டார். அதற்கு லூதர், “ஆம்” என்று பதிலளித்துவிட்டு நித்திரையடைந்தார். என்னே ஒரு அற்புதமான இறுதிப்பயணம்! என்னுடைய இறுதி வார்த்தைகளும் அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு அர்த்தமற்ற வார்த்தையூடன், ஒரு வாக்கியத்தின் நடுவில் என் வாழ்வினை முடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. மிக முக்கியமானது எதுவோ அதனை நம்பிக்கையூடன் உறுதிப்படுத்தி, லூத்தரைப்போலவே மரிக்க நான் விரும்புகிறேன்.

இயேசுவின் இறுதி வார்த்தைகளைக் குறித்த விளக்கம் என்ன? “இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்” (15:37) என்று மாற்கு சுவிசேஷம் கூறுகிறது. “இயேசு மறுபடியூம் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்” (27:50) என்று மத்தேயூவூம் ஒப்புக்கொள்கிறார். இந்த இறுதி மகா சத்தம் என்னவாக இருந்தது? அது வெற்றியின் முழக்கமா அல்லது விரக்தியின் கூக்குரலா? அது இயேசுவின் பாடுகளின் மிகவூம் கீழான பகுதியைக் குறித்ததா, அல்லது அவருடைய வெற்றிப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்ததா?

நாம் ஊகிக்கவேண்டியதில்லை; ஏனெனில், லூக்கா இந்த இடைவெளியை நிரப்புகிறார். “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லிஇ ஜீவனைவிட்டார்” (23:46) என்று லூக்கா எழுதுகிறார். “முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.” (19:30) என்று இயேசு கூறியதை யோவான் சேர்த்துக் கூறுகிறார்.

இயேசுவின் இறுதிக் கதறலானது, தேவன்மீது வைத்திருந்த நம்பிக்கையில் வெளியான வேதனைமிகுந்த கதறலாகும். மேலும், அவருடைய இறுதி வார்த்தைகள் விசுவாசத்துடன் உட்புகுந்து இணைந்திருந்ததால், அவை அவருடைய இறுதி வார்த்தைகளாக இருக்கவில்லை. தேவன் தம்முடைய அருமை குமாரனாகிய இயேசுவை வெற்றியூடன் உயிரோடே எழுப்பினார்; அதேபோல, கிறிஸ்துவை விசுவாசிக்கும் அனைவரையூம் அவர் ஒருநாள் உயிரோடே எழுப்புவார்.

மைக் விட்மர்

உங்களுடைய இறுதி வார்த்தைகள் என்னவாக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நீங்கள் பிரியாவிடை பெற்ற பின்பு உங்கள் அன்புக்குரியவர்கள் அவற்றை வாசிக்கும் வகையில் அவற்றை எழுதிவையூங்கள். இன்றைய நாளில் இந்த இறுதி வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு ரதிபலிக்கலாம்?

பிதாவேஇ எனது ஆவியை இப்போதும் என்றென்றும் உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கிறேன்.