i am thirsty

i am thirsty

நான் தாகமாயிருக்கிறேன்

இன்றைக்கான வேதாகமப்பகுதி :யோவான் 4:5–14
(இயேசு) தாகமாயிருக்கிறேன் என்றார். —யோவான் 19:28

இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு, ஆழ்துளை கிணறு மற்றும் ஒரு எளிய வீட்டு குடிநீர் வடிகட்டும் அமைப்பை வழங்குவதற்காகப் பயணித்து வந்த தன்னார்வ தொண்டர்கள் குழுவினரை ஒரு குடும்பத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தாகத்தைத் தணிக்க பாதுகாப்பான தண்ணீரை எவ்வாறு இந்த வடிகட்டும் அமைப்பு வழங்கும் என்று அக் குடும்பத்தாருக்கு செயல்விளக்கம் அளித்த அக் குழுவினர், அவர்களின் உள்ளார்ந்த தேவையை திருப்திப்படுத்தக்கூடிய “ஜீவ தண்ணீரை” குறித்தும் அதாவது, கர்த்தருடனான சமாதானத்தைப்பற்றியூம் அக் குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தனர்.

சரீர தாகத்தைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு நபரின் தேவையைத் தொடர்புபடுத்தி, அதன்மூலம் ஆவிக்குரிய யதார்த்தத்தை விளக்கிய கிறிஸ்துவின் உதாரணத்தை இந்தக் குழுவினர் பின்பற்றினர். பயணக்களைப்பினால் சோர்வடைந்திருந்த இயேசு, ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். அங்கு வந்த ஒரு பெண்ணிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்ட அவர், உடனடியாக அவளுடைய உள்ளார்ந்த தேவையைக் குறித்துப் பேசினார்: “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியூம் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது” (யோவான் 4:13-14). இவ்வாறாக கர்த்தருடனான உறவின்மூலம் ஆத்துமா புத்துணர்ச்சி பெறுவதற்கான வழியினை இயேசு அவளுக்குக் காண்பித்தார்.

இந்த ஜீவ தண்ணீரை அனைவருக்கும் வழங்குவதற்காக, கிறிஸ்து மீண்டும் தாகத்தின் வேதனையினூடாகக் கடந்து செல்லவேண்டியிருந்தது. அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28) என்று கூக்குரலிட்டார் — இது அவருடைய உயிர் மெதுவாக நீங்கிக்கொண்டிருப்பதற்கான அடையாளமாகும். தேவன் தம்மை மீண்டும் உயிர்ப்பிப்பார் என்பதை அறிந்திருந்த அவர், மனப்பூர்வமாக சரீர தாகத்தின் வலியைத் தாங்கிக்கொண்டு பாடுபட்டார். கிணற்றருகே இருந்த அந்த பெண்ணைப்போலவே, இயேசுவின்மீது விசுவாசம் வைப்பதன்மூலம்இ நாமும் நம்முடைய தாகமுள்ள ஆத்துமாக்களுக்கான ஜீவத்தண்ணீரண்டை அணுகிடமுடியூம்.

அந்தக் குடும்பத்தினர் சுத்தமான தண்ணீரைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தபோது, கிறிஸ்து வழங்குகின்ற ஜீவத்தண்ணீரின் பரிசையூம் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தபோதும், இந்தத் தன்னார்வத்தொண்டர் குழுவினர் அதைக் கொண்டாடினர். இது, ஆத்துமா தாகம்கொண்டுள்ள எவருக்கும் கிடைக்கும் ஒரு ஈவாகும்.

லிசா எம். சாம்ரா

தண்ணீருக்கான தாகம் ஆவிக்குரிய தாகத்துடன் எவ்வாறு தொடர்புபடுகிறது?
ஜீவ தண்ணீருக்கான அழைப்பிற்கு நீங்கள் எவ்வாறு பதிலளித்திருக்கிறீர்கள்?

இயேசுவேஇ என் ஆத்துமா உம்மில் திருப்தியடைகிறது.