மன்னிப்பதற்கான கிருபை
1999, ஜனவரி மாதம் 23ம் திகதி அன்று, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகன்களான பிலிப் மற்றும் தீமோத்தி ஆகியோர், தங்கள் ஜீப்பில் உறங்கிக்கொண்டிருந்தபோது தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏழை தொழுநோயாளர்களின் மத்தியில் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள சேவையானது அதுவரை வெளியூலகிற்கு அதிகம் தெரியாமலே இருந்தது.
இத்தகைய ஒரு பேரிழப்பிற்கு மத்தியிலும், அவரது மனைவியான கிளாடிஸ் மற்றும் மகளான எஸ்தர் ஆகியோர் அனைவரையூம் வியப்பில் ஆழ்த்தினர். ஏனெனில் அவர்கள் வெறுப்பை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மன்னிப்பு வழங்குவதைத் தெரிந்தெடுத்தனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கு விசாரணையின் முடிவில், “அந்தக் கொலையாளிகளை நான் மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்தவித கசப்புணர்வூம் இல்லை… கிறிஸ்துவூக்குள் கர்த்தர் என்னை மன்னித்திருப்பதால், தம்மைப் பின்பற்றுபவர்களும் அதையே செய்யவேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கிறார்” என்று கூறிகின்ற ஒரு அறிக்கையை கிளாடிஸ் அவர்கள் வெளியிட்டிருந்தார்.
அந்தக் குற்றவாளிகளை மன்னிப்பதற்கான தைரியத்தையூம் வலிமையையூம் கிளாடிஸ் மற்றும் எஸ்தர் கண்டடைந்தபோது அது பிரமிக்கத்தக்கதாக இருந்த அதேசமயம், நம்மைக் காயப்படுத்துகிறவர்களையூம், அவமதிக்கிறவர்களையூம் அல்லது தவறாக நடத்துகிறவர்களையூம் மன்னிப்பதற்கான கிருபையை எப்படிக் கண்டடைய முடியூம் என்பதற்கு இயேசுவே நமக்கு சிறந்த முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார் என்பதை நாம் அறிந்திருக்கிறௌம்.
நம்முடைய சத்துருக்களை சிநேகிக்கவூம், நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவூம் அவர் வெறுமனே கூறவில்லை (மத்தேயூ 5:43-48)@ மாறாக, சிலுவையில் உச்சக்கட்ட மன்னிப்பை அவர் மாதிரியாகக் காண்பித்தார். “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்” (ரோமர் 5:10) கிறிஸ்து நமக்காக அடிக்கப்பட்டு, பரிகசிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் அவர் தம்மைத் துன்புறுத்தியவர்களைச் சபிப்பதற்குப் பதிலாக, “பிதாவே, இவர்களுக்கு மன்னியூம், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றே கூறினார் (லூக்கா 23:34).
எவரும் இன்னொருவரை மோசமாக நடத்துவதற்கு எவ்விதமான மன்னிப்பும் இல்லையெனினும், நமக்குள்ளிருக்கும் கோபம் அல்லது கசப்புணர்வை விட்டுவிலக தேவையான கிருபையைத் தருமாறு கர்த்தரிடம் கேட்போம். நாம் தம்மோடும், மற்றவர்களோடும் ஆரோக்கியமான உறவில் வாழவேண்டுமென்று இயேசு விரும்புகிறார். அன்பில் நடந்து கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கூடாக கர்த்தரால் மன்னிக்கப்பட்டதுபோல நாமும் மன்னிப்போம் (மத்தேயூ 6:12).
நான்சி காவிலேன்ஸ்
இன்னும் அதிகமாக மன்னிக்கும் குணநலனுள்ள ஒருவராக நீங்கள் எப்படி மாறமுடியூம்?
|
|
|
