இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி.எபேசியர் 2:15

கிளாட் மோனெட்டின் மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான “நீர் அல்லிகள்” அவரது கொல்லைப்புற குளத்தின் அமைதியான மலர்களை சித்தரிக்கிறது. அது பார்வையாளர்களுக்குஅமைதியின் புகலிடமாக இருக்க வேண்டும் என்று அதனை உருவாக்கினார். இந்த நோக்கம் 1920 களில் பாரிஸில் உள்ள ஆரஞ்சரி அருங்காட்சியகத்தில், மோனெட்டின் எட்டு ஓவியங்களை வைப்பதற்காக, இரண்டு காட்சியகங்கள் கட்டப்பட்டபோது, அடையப்பட்டது.இது முதலாம் உலகப் போரின் அழிவுக்குப் பிறகுஅமைதியின் புகலிடமாக
உருவாகியது.

முரண்பாடாக, நீர் அல்லிகள், எண்ணற்ற மக்களுக்கு அமைதியைக் கொடுத்தாலும், அவைகளை வரையும்போது மோனெட் ஒரு அமைதியான நிலையில் இல்லை.அவரது கேன்வாஸ்களில் காற்று வீசியது, மேலும் சாலை தூசி அல்லிகள் மீது படிந்தது.அது அவருக்கு ஆழ்ந்த விரக்தியை ஏற்ப்படுத்தியது. அவர் விரும்பாத டஜன் கணக்கான ஓவியங்களை மிதித்தார் . “நான் வண்ணம் தீட்டும்போது அடிக்கடி வேதனைகளையே அனுபவிக்கிறேன்,” என்று தன் மன உளைச்சல்களை பகிர்ந்தார் . அவருடைய வேலையிலிருந்து நாம் அனுபவிக்கும் அமைதிக்கோவிலையே இல்லை.

எபேசியர் 2 ல், பவுல், யூதருக்கும்புறஜாதிகளுக்கும் இருந்த விரோதம்இயேசு கிறிஸ்துவால் ,தேவனோடும் அவர்களுக்குள்ளும் சரிக்கட்டப்பட்டதையும்(வ.11-15). இயேசு கிறிஸ்துவின்வேதனை நிறைந்த மரணம்அதற்குக் காரணமாக இருந்ததென்பதையும், நினைவுகூர்ந்தார்(வச. 16). சுவிசேஷத்தின் சமாதானம் இயேசு கிறிஸ்து விலைக்கிரையமாக்கப்பட்டதினாலே நமக்குக் கிடைத்தது.

மோனட்டின் நீர் அல்லிகளைப் பார்க்கும்போது, கடவுளுடனும் ஒவ்வொருவருடனும் நாம் அனுபவிக்கும் சமாதானம், இயேசுவின் வேதனை நிறைந்த மரணத்தினால் கிடைத்ததென்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எங்கே, எப்பொழுது, நீ தேவனுடன் நெருங்கியிருப்பதாக உணர்கிறாய்? எவ்வாறாகஇந்தச் சமாதானம் இயேசு கிறிஸ்துவின்சிலுவைப் பாடுகள் மூலம் கிடைத்ததென்பதைஉன்னில் தானே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும்?

தேவனே, என் சமாதானம்உமது வேதனையாகிய விலைக்கிறையத்தின்மூலம் எனக்குக் கிடைத்தது.நான் அதை ஒருக்காலும்எனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது.நன்றி..

எபேசியர் 2:11–18

ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.