முடிவுரை | ஜேம்ஸ் பேங்க்ஸ், நமது அனுதின மன்னா ஆசிரியர்

தேவனின் அன்பு மற்றும் மன்னிப்பின் சத்தியம்

ரு நாள் என் நண்பர் மார்க் என்னிடம் “இயேசுவின் அன்பு எவ்வளவு வல்லமையானது என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்.” என்னுடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுத்த நாளிலிருந்து 16 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பு என்னை தாங்குகின்றது” என்றார்.

நான் முதன் முதலாக மார்க்கை சந்தித்தபோது அவர் போதகராக இருந்தார். அவருடைய இருளிலிருந்தும் பயங்கரமான இறந்த காலத்தில் இருந்தும் தேவன் எவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு வந்தார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. மார்க் தம் 13ஆம் வயதில் இருந்து 30 வயது வரை போதை பழக்கத்திற்கு முதலில் ஓபியம் பிறகு ஹெராயின் போன்ற பழக்கத்திற்கு அடிமையானார். அவருடைய தம்பி போதை பழக்கத்தால் இறந்த பின்பும் மார்க் அதே வழியை பின்பற்றினார். பிறகு அவருடைய சகோதரியும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்தார்.

மார்க்கும் போதை பழக்கத்தில் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தார். முன்பு சந்தித்திருந்தால் மோசமாக இருந்திருக்கும் என்று இன்னொரு நண்பரிடம் சொன்னதைக் கேட்டேன். ஆனால் இன்று மார்க் மனம் திருந்தியவர். தேவனின் அன்பு அவருடைய இருதயத்திலும் வாழ்விலும் கிரியை செய்து விடுதலை ஆக்கியது.தேவன் மார்க்கை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான மக்களை போதை பழக்கத்திலிருந்து மீள ஊக்குவிக்கிறார். என் மகன் ஜியோப் ஹெராயின் போதைப் பழக்கத்திலிருந்து மீளவும் கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்வை கண்டடையவும் உதவினார்.

தேவன் இயேசுவின் மூலம் நம் பாவங்களை மன்னிக்கும் போது அவர் புதிய வாழ்வை நமக்குள் சுவாசிக்கிறார். அவருடைய மன்னிப்பு முழுமையானது. அவர் குறைவற்று நேசிக்கிறார் மற்றும் முழுமையாக மன்னிக்கிறார். தேவன் இறந்தகாலத்தை முழுமையாக விலக்கினார் எனவே நாம் அவருடன் புதிய ஆரம்பத்தை துவக்க முடியும். அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும்- அவர்கள் எங்கிருந்தாலும் அல்லது என்ன செய்திருந்தாலும் ஒரு விஷயமும் இல்லை -அவர் வாக்களிக்கிறார்,” நான் அவர்களின் அநியாயங்களை மன்னித்து பாவங்களை இனி நினையாமல் இருப்பேன்” (எபிரெயர் 8: 12).

நமக்கு வேதாகமம் சொல்கிறது இயேசுவை ஏற்கும் ஒவ்வொரு நபரும் “புதிய மனிதனாக” (உண்மையாகவே” புதிய சிருஷ்டிப்பு”) மாறுகின்றனர் அங்கு “பழைய வாழ்வு ஒழிந்துபோயின” மற்றும் “புதிய வாழ்வு ஆரம்பித்தது” (2 கொரிந்தியர் 5:17) நம்முடைய உடைந்த இறந்த காலத்தை பின் தள்ளி வைத்து ஒரு புதிய எதிர்காலம் நமக்கு முன் திறந்திருக்கிறது. அப்போஸ்தலர் யோவான் தேவன் வழங்கும் புதிய ஆரம்பத்தை உற்சாகமாக விளக்குகிறார்: “நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்! (1 யோவான் 3:1) நாம் இராஜாதிராஜனின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஒரு புதிய அடையாளத்தை பெற்றோம். நித்தியமாக “அவருடைய அன்பு எத்தனை அகலம், எத்தனை நீளம், எத்தனை உயரம்” என்று நித்தியமாக கண்டடைய எதிர் நோக்குங்கள் (எபேசியர் 3:18).

வேத வாக்கியங்களின் படி முதல் ஈஸ்டர் காலையில் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அந்த கல்லறையால் இந்த அன்பின் பரிமாணங்களை கட்டுப்படுத்த இயலவில்லை. வரலாற்றின் உண்மையான இயேசுவின் உயிர்த்தெழுதல் தேவனின் முழு ஏற்றுக்கொள்ளலையும் இயேசு நமக்காக வாழ்ந்த நீதியுள்ள வாழ்வை ஒப்புக் கொள்வதையும், அவர் நமக்காக பலியானதையும் மற்றும் மரணத்தை எதிர்த்து மகிமையான வல்லமையை விளக்கியதையும் குறிக்கின்றன. ஜீவனுள்ள தேவன் சாவின் அதிகாரத்தை எதிர்த்து ஜெயித்து நித்திய வாழ்வு என்னும் புதிய உண்மையை உருவாக்கினார். அது மனந்திரும்பிய ஒவ்வொரு நபரையும் பாவத்திலிருந்து குற்ற உணர்விலிருந்து மற்றும் மரணத்திலிருந்து இன்று நம்மை விடுவிக்கிறது. ஈஸ்டரின் நற்செய்தியை விசுவாசித்து பாவத்தை விட்டு திரும்புபவர்கள், தேவனின் மன்னிப்பை பெறுவார்கள். பரிசுத்த ஆவியானவர் மூலம் ஊற்றப்பட்ட அளவிட முடியாத அன்பு மற்றும் கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு – ஏராளமான மற்றும் இலவச நித்தியஜீவன் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் எதிர்கால நம்பிக்கையில் நிறைந்தது ஏனென்றால் இயேசு உயிர்த்தெழுந்தார்.

“அகலம்… நீளம்… உயரம்… மற்றும் ஆழம்”– அந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. தேவனின் அன்பு மற்றும் மன்னிப்பின் கதை அந்த நான்கு வார்த்தைகளில் உள்ளன. தேவன் படைத்தவர் நட்சத்திரங்களை சொல்லியே உருவாக்கியவர், சிறிய கரு வளர்ந்து பெரியவர் ஆவதும் அது போல தான், நம்மை தம்மிடம் அழைத்துக் கொள்கிறார். தேவ அன்பு மிகவும் அகலமானது எனவே தேவன் சிலுவையில் தம் கரங்களை விரித்தார் நாம் பாவத்தில் இருக்கும் போதே நம் தவறுகளின் கனத்தை அகற்றினார்: “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார் (1 பேதுரு 2: 24) தேவனின் அன்பு மிகவும் நீளமானது அதன் முடிவு வரை நம்மால் வரமுடியாது- அவரால் கண்டுபிடிக்க முடியாத தூரம் நம்மால் ஓட முடியாது. அவருக்கு எட்டாத தூரத்தில் நம்மால் இருக்க முடியாது. தேவனின் அன்பு விலை மதிக்க முடியாத அளவு மிக உயரமானது, நமக்கு ஏற்படும் சிறந்த விஷயமாகும்: “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசியர் 1:7). இயேசுவின் மூலம் தேவன் நம் மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் ஆழமானது, நம்முடைய தேர்வுகள் மற்றும் தவறுகள் எவ்வளவு தாழ்வாக கொண்டுவந்து இருந்தாலும், அவர் இன்னும் நம்மை அழைத்துச் சென்று நம்மை நெருங்கி வருவதற்கு கீழே வளைக்க முடிகிறது. உடைந்த இடங்களில் கூட அவர் நம்மை வலிமையாக்க முடியும், நாம் ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைக்கும் விதங்களில் மீள முடியாது என்று தோன்றக்கூடியவற்றில் இருந்து நன்மையைக் கொண்டு வர முடியும்.

தேவன் என்னுடைய நண்பர் மார்க்குக்கு செய்ததைப் போல் எனக்கும் செய்தார் நான் ஒரு தடவை கேட்டேன், “தேவனுடைய மன்னிப்பு என்றால் என்ன?” அவர் பதிலாக, “நான் என் வலியைப் பற்றி தேவனுடன் நேர்மையாக இருக்கும் போது உண்மையாக இருக்கும் போது என் துன்பத்தில் இந்த உலகில் ஒப்பிட முடியாத ஓர் அன்பை எனக்கு வெளிப்படுத்தினார். அவர் காட்டிய அன்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அதுதான் சிலுவை” என்றார்.

வேதாகமம் இவ்வாறு சொல்லுகிறது: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் (1 யோவான் 1:9)

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

நம்முடைய உணர்வுகள் மாறிக்கொண்டே இருந்தாலும்
தேவனுடைய மன்னிப்பு மாறாமல் இருக்கின்றது.
நாம் பாவங்களை அறிக்கையிட்டால்
தேவன் நம்மை மன்னிப்பார். இந்த
சத்தியத்தை நாம் நம்பலாம்.
சாராஹ எம்.ஹப்

கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின் படி
நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்
பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

1 கொரிந்தியர் 15: 3-4

∼∼∼

நம் பாவங்கள் தள்ளிவைக்கப்பட்டது வேத
வாக்கியங்களின் மொழியில் … அவை முழுமையாக
அகற்றப்பட்டன, தேவனின் பின்னே போடப்பட்டு,
அழிக்கப்பட்டு நினைக்கப் படுவதில்லை மற்றும்
கடலின் ஆழத்தில் வீசப்பட்டன.

ஜெர்ரி பிரிட்ஜஸ்

∼∼∼

“இயேசுவே கர்த்தர்” என்று உங்கள் வாயினாலே
அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து
எழுப்பினாரென்று உன் இருதயத்திலே
விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவாய்.
ரோமர் 10:9

∼∼∼

“அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்”
லூக்கா 24:6

∼∼∼

 

banner image