1 பேதுரு 1:18-19
குற்றமில்லாத மாசற்ற… கிறிஸ்துவின்
விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்…
பூரணமான பலி
ஏப்ரல் 24,1990 அன்று 1.5 பில்லியன் மதிப்புடைய ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) விண்வெளியின் தொலைதூர படங்களை பூமிக்கு அனுப்பும் என்னும் பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்டது. இந்த விலை உயர்ந்த திட்டத்திலிருந்து வானியலாளர் முதன்மையாக எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போது நிலைகுலைந்து போனார்கள். அந்த புகைப்படங்கள் சிதைந்து இருந்தன மற்றும் பயனற்றதாக இருந்தன. விஞ்ஞானிகள் அதன் முக்கியமான கண்ணாடியில் ஒரு குறைபாட்டை கண்டறிந்தார்கள். ஒரு மில்லி மீட்டர் அல்லது ஒரு முடியிழையை விட மெலிதான அளவு கோளப் பிறழ்வு இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதன் குறைபாட்டை திருத்தினர்.
நிஜத்தில் எவ்வாறு சிறிய குறைபாடு தொலைநோக்கியின் பயன்பாட்டை தடுக்கிறதோ அதற்கு மாறாக அவர் முற்றிலும் பரிபூரண ராக பாவமற்ற மற்றும் களங்கமற்ற சமமற்ற மதிப்புடன் இயேசு திகழ்கிறார் (1 பேதுரு 1:19). இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரணமடைந்தார் மற்றும் உயிர்த்தெழுந்தார். அத்துடன் அவர் தம்முடைய வார்த்தைகளிலும் எண்ணங்களிலும் செயல்களிலும் பாவமே செய்யவில்லை. ஒரு முடியின் அகலத்தின் அளவில்கூட குறைபாடு இல்லை.
முழுமையான பரிபூரணம் இயேசுவிற்கு அவசியம் ஏனென்றால் இயேசு ஏற்றுக்கொள்ளப்பட்ட, குறைபாடற்ற பலி; நம்முடைய பாவத்திற்காக அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நம் பாவத்தின் விளைவுகளை ஏற்ற ஒருவர் (2 கொரிந்தியர் 5:21). இந்த வியத்தகு பலியின் மதிப்பு உலகப்பிரகாரமான உடைமைகள்-தங்கம் அல்லது வெள்ளியைவிட மதிப்பு உள்ளது (1 பேதுரு 1:18). அவற்றுக்கு நித்திய மதிப்பில்லை ஏனென்றால் இயேசுவின் பலியே பாதுகாப்பான தேவனுடன் நித்திய சமாதானத்தை அளிக்கிறது.
கிறிஸ்துவே நம் பாவங்களுக்கான குற்றமற்ற பலி. தேவனுக்கே மகிமை. நம்முடைய இரட்சிப்பிற்காக தம் ஜீவனை பலியாக்கினார் என்பதில் நாம் மகிழ்வோம்.
லிசா சாம்ரா
நீங்கள் இயேசுவின் துன்பத்தை மற்றும் உயிர்த்தெழுதலை சிந்திக்கும்போது எந்த விஷயம் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது? தினந்தோறும் அவரின் அன்பை வெளிக்காட்டும் வழிகளுக்கு நீங்கள் எப்படி நன்றி செலுத்துவீர்கள்?
இயேசுவே நீங்கள் பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்து மற்றும் உங்களையே எங்கள் பாவத்திற்காக பரிபூரண பலியாக அர்ப்பணித்ததற்காக உங்களுக்கு நன்றி.
இன்றைய வேத பகுதி | 1 பேதுரு 1:18-21
18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்கள் ஆகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்து இருக்கிறீர்களே.
20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராய் இருந்து தமது மூலமாய் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்த கடைசி காலங்களில் வெளிப்பட்டார்.
21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன் மேல் இருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, மகிமையை கொடுத்தார்.