பயப்படாதிருங்கள். . .இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11

பீனட்ஸ் என்ற நகைச்சுவை தொடரில், லினஸ் அவரது நீல நிற பாதுகாப்பு போர்வைக்காகவே மிகவும் பிரபலமானவராய் அறியப்பட்டார். அவரது சௌகரியத்துக்கு அவைத் தேவைப்படுவதால், எல்லா இடங்களுக்கும் அதனை லினஸ் தனது எடுத்துச் செல்ல அவர் வெட்கப்படுவதில்லை. அவரது சகோதரி லூசி அந்தப் போர்வையை விரும்பாததினால் அடிக்கடி அதனை அகற்ற முயற்சித்தார். அவள் அதனை வெட்டி ஓர் காத்தாடி செய்து, அதை ஓர் அறிவியல் கண்காட்சி திட்டத்திற்காக பயன்படுத்தினாள். லினஸும் தனது போர்வையின் மீது குறைவாக பற்றுதலாயிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தாலும், அவ்வப்போது அவ்வெண்ணத்தை மறுபரிசீலித்தார்.

எ சார்லிபிரவுன் கிறிஸ்மஸ் என்ற திரைப்படத்தில், விரக்தியடைந்த சார்லிபிரவுன் “கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள் யாரும் இல்லையா?” என்று கேட்கிறார். லினஸ்தனது கையில் பாதுகாப்புப் போர்வையுடன் மேடையில் அடியெடுத்து வைத்து லூக்கா 2:8–14ஐ மேற்கோள் காட்டுகிறார். அவரது பேச்சின்நடுவில் “பயப்படாதிருங்கள்” என்று சொல்லும்போதே, தனது போர்வையைக் கைவிடுகிறார் – பயப்படும்போது அவரை ஒட்டிக்கொண்ட ஓர் விஷயம்.

நாம் பயப்படத் தேவையில்லை என்பதை பற்றி கிறிஸ்துமஸ் நினைவூட்டுவது என்ன? மேய்ப்பர்களுக்குத் தோன்றிய தேவதூதர்கள் “பயப்படாதிருங்கள். . . இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” (லூக்கா 2:10-11) என்றனர்.

இயேசுவாகிய “தேவன் நம்மோடிருக்கிறார்” (மத்தேயு 1:23). பரிசுத்த ஆவியாகிய உண்மையான தேற்றரவாளன் (யோவான்14:16) நம்முடன் பிரசன்னராயிருப்பதால், நாம் பயப்படத் தேவையில்லை. நாம் நமது “பாதுகாப்பு போர்வைகளை” களைந்து விட்டு அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம்.

– ஆனி சிட்டாஸ்

சிந்தனை

நீங்கள் எதற்காக பயப்படுகின்றீர்கள்? பரிசுத்த ஆவியின் பிரசன்னம் உங்களுக்கு எத்தகையப் பிரச்னைகளில் உதவுகின்றது?
தேவனே, நீரே சிறந்த தேற்றரவாளன் என்பதை நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். மாய்மாலமான பாதுகாப்பைக் கொடுக்கும் விஷயங்களை விட்டு விலகி, உம்மைப் பற்றிக்கொண்டு நீர் காட்டும் வழியில் நடக்க எனக்கு உதவிபுரியும்.

 

 

 

banner image