தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள். லூக்கா 12:31
2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. நோய் தொற்று அறியப்படாத பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தங்களுக்கு வைரஸ் தொற்றுவரக்கூடும் என்று அஞ்சினர். கவலையில் நிபுணரான (எக்ஃஸ்பர்ட் இன் அன்சைட்டி) கிரஹாம் டேவி என்பவரின் கூற்று என்னவென்றால், எதிர்மறையான செய்தி ஒளிபரப்புகள் “உங்களை சோகமாகவும் கவலையாகவும் ஆக்குவதற்கு வாய்ப்புள்ளது” என்பதே. சமூக ஊடகங்களில் பரவிய ஓர் நகைச்சுவை துணுக்கில்: ஓர் நபர் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டியது; மேலும், அவர் கவலைப்படுவதை எப்படி நிறுத்துவது என்று கேட்டார். பதிலுக்கு அறையிலிருந்த மற்றொரு நபர், தொலைக்காட்சியினை அனைத்து விட்டு (ஆஃப்) கவனத்தை திசை திருப்பலாம் என்று யோசனைக் கூறினார்!
கவலைப்படுவதை நிறுத்துவதற்கு லூக்கா 12 நமக்கு சில அறிவுரைகளை வழங்குகிறது: “தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்” (வச. 31). அவரைப் பின் பற்றுபவர்களுக்கு பரலோகத்தில் ஓர் சுதந்தரம் இருக்கிறது என்ற வாக்குறுதியில் நாம் கவனம் செலுத்தும்போது, நாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுகிறவர்களாயிருக்கிறோம். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, நம் கவனத்தை மாற்றி தேவன் நம்மேல் நோக்கமாயிருக்கிறார்; அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளலாம் (வச. 24-30).
இயேசு தமது சீடர்களை உற்சாகப்படுத்த: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (வச. 32) என்றார். தேவன் நம்மை ஆசீர்வதிப்பதில் களிகூறுகிறார்! ஆகாயத்துப் பறவைகளையும், வயல் நிலங்களிலுள்ள பூக்களையும்விட நம்மை அதிகமாய் கவனிக்கிறார் என்பதை உணர்ந்து அவரை துதிப்போம். (வச. 22-29). கடினமான காலங்களில்கூட வேதாகமத்தை வாசித்து, தேவன் தரும் சமாதானத்திற்காய் ஜெபம் செய்து, உண்மையுள்ள நல்ல தேவனில் நமது நம்பிக்கையை வைக்கலாம்.
– ஜூலி ஸ்வாப்
சிந்தனை
இன்று நீங்கள் பயப்படுவதற்கு என்ன காரணம்? நீங்கள் கவலைப்படத் தொடங்கும் போது தேவனுடைய ராஜ்யத்தைத் தேட நீங்கள் செய்யக்கூடிய ஓர் காரியம் என்ன?
அன்புள்ள தேவனை, பயம் அல்லது கவலையில் உலன்று வாழ்வதற்குப் பதிலாக, நீர் என்மேல் கரிசனையாயிருக்கிறீர் என்பதை உணர எனக்கு உதவி புரியும்.
|
|
|