கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை. எண்ணாகமம் 14:9
நான் சிறுவனாக இருந்த போது, எனது அப்பா புதருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கம் போல் உறுமியபடி எங்களை “பயமுறுத்துவார்”. 1960களில் நாங்கள் கானாவின் கிராமப்புறங்களில் வாழ்ந்தாலும், சிங்கம் அருகில் வந்து பதுங்கியிருப்பது அநேகமாக சாத்தியமற்றததே. நானும் எனது சகோதரனும் அந்த சத்தத்தைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே, எங்கள் தந்தையுடன் விளையாடும் நேரம் வந்துவிட்டதை அறிந்து உற்சாகமடைவோம்.
ஓர் நாள் நண்பர் ஒருவர் பார்ப்பதற்காக வந்தார். நாங்கள் விளையாடும்போது, அதே வழக்கமான உறுமல் சத்தம் கேட்டது. எங்கள் நண்பர் அலறி அடித்துக்கொண்டு ஓடினார். எனது சகோதரனும் நானும் எவ்வித ஆபத்துமில்லாத என் தந்தையின் குரலின் ஒலியை அறிந்திருந்தபோதும், ஓர் வேடிக்கையான விஷயம் நடந்தது – நாங்களும் அவளுடன் சேர்ந்து ஓடினோம். எங்கள் நண்பன் பயந்துவிட்டதை எனது அப்பா நன்றாக உணர்ந்தார்; நானும் என் சகோதரனும் பிறரது பயம்நம்மை பாதிக்காதவாறு செயல்படகற்றுக்கொண்டோம்.
காலேபும் யோசுவாவும் மற்றவர்களின் கலக்கத்தால் திகைப்படையாத மனிதர்களாய் தனித்து நிற்கிறார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்களிக்கப்பட்டதேசத்திற்குள் நுழையத் தயாராக இருந்தபோது, மோசே 12 நபர்களை தெரிந்தெடுத்து அந்தப் பகுதியை உளவு பார்த்து வரும்படி அனுப்பினார். அவர்கள் அனைவரும் ஓர் அழகான பிரதேசத்தைக் கண்டனர்; ஆனால் 10 பேர் தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக் குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள் (எண். 13:27-33). இதனால் ஜனங்கள் மத்தியில் ஒருவித பயமுண்டானது (14:1-4). காலேபும் யோசுவாவும் மட்டுமே நிலைமையை துல்லியமாக மதிப்பிட்டனர் (வச. 6-9). தங்கள் பரம தந்தையின் செயல்களை அறிந்திருந்தபடியால், அவர் ஜெயத்தைத் தருவார் என்று விசுவாசித்தனர்.
சில “சிங்கங்கள்” உண்மையான சிங்கத்தைப் போன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மற்றவை அனைத்தும் மாயையே. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் நன்கு அறிந்த நம்பிக்கைக்குரிய அவருடைய சத்தம் மற்றும் செயல்களின் மீது நமது நம்பிக்கையை வைப்போம்.
– டிம் குஸ்டாஃப்சன்
சிந்தனை
தேவனை, இன்று நாங்கள் பலவித அச்சங்களை எதிர்கொள்கிறோம். உண்மையான ஆபத்தையும் வெற்று அச்சுறுத்தல்களையும் வேறுபடுத்திப் பார்க்க எங்களுக்கு உதவிபுரிந்து, அவை அனைத்திலும் உம்மை நம்புவதற்கு எங்களுக்கு உதவிசெய்யும். அப்பொழுது பயத்துடன் வாழாமல் நம்பிக்கை பெற்றவர்களாய் வாழ்வோம்.
ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப் போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப் போல் தைரியமாயிருக்கிறார்கள்- நீதிமொழிகள் 28:1
|
|
|