பணம்

வாசிக்க: மத்தேயு 6:24–34
“இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”. —மத்தேயு 6:24

எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அதை ஒரு தொழிலாக எண்ணாமல் ஒரு சேவை என நினைத்து வேலை செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு நிறுவனம் எனக்கு அதிக லாபம் தரும் பதவியை அளிக்க முன் வந்தது. என் குடும்பத்திற்காக நான் அந்த புது வாய்ப்பை நாடி இருக்கலாம். ஆனால் என் வேலையை அழைப்பாய் எண்ணி நான் செய்து கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் பணம். . .

அப்போது எழுபதுகளில் இருக்கும் என் தகப்பனாரை அழைத்து, நிலைமையை விளக்கினேன். அவரது பதில் மெதுவாகவும், தெளிவாகவும் இருந்தது. “பணத்தைப் பற்றி மட்டும் யோசிக்க வேண்டாம். இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?” என்ற கேள்வி நொடிப்பொழுதில் என் மனதை உறுதியாக்கியது. “நான் விரும்பிய வேலையை விட்டுச் செல்வதற்குப் பணம் மட்டுமே காரணம்! நன்றி, அப்பா” எனக் கூறினேன்.

இயேசு தனது மலைப்பிரசங்கத்தின் கணிசமான பகுதியை பணத்திற்காக அர்ப்பணித்தார். செல்வச் சேர்க்கைக்காக அல்ல, மாறாக “நம் தினசரி ஆகாரத்துக்காக” ஜெபிக்க அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:11). பூமியில் பொக்கிஷங்களைச் சேமித்து வைப்பதற்கு எதிராக அவர் எச்சரித்தார் (வ. 19). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று இயேசு கூறினார் (வ. 33).

பணம் முக்கியம் தான். ஆனால் பணம் நமது முடிவெடுக்கும் செயல்முறையை ஆளக்கூடாது.

-டிம் கஸ்டாஃப்சன்

 

 

banner image