நான் உன்னை மறப்பதில்லை! ஏசாயா 49:15
எனது பெற்றோர் மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இறந்தபோது, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற எனது பயத்தில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவர்கள் இப்பூமியில் இல்லை என்பது என்னுள் ஓர் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியது. நான் திருமண வயது வந்த ஓர் இளைஞனாக இருந்ததால், அவர்கள் இல்லாமல் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துவது என்று யோசித்தேன். மிகவும் தனிமையை உணர்ந்த நான் தேவனைத் தேடினேன்.
ஓர் நாள் காலையில் நான் தேவனிடம், எனது பக்குவமற்ற பயம் மற்றும் அதனால் ஏற்படும் சோகம் (அவர் ஏற்கனவே அறிந்திருந்தாலும்) பற்றி அவரிடம் அறிக்கையிட்டேன். அன்றைய தினம் நான் வாசித்து தியானித்த வேதப் பகுதி ஏசாயா 49. “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை!” (வச. 15). தேவன் தம் மக்களை மறப்பதில்லை என்று ஏசாயா மூலம் உறுதியளித்து, மறுபடியும் தம் குமாரனாகிய இயேசுவின் மூலம் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வார் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். ஆனால் அந்த வார்த்தைகள் என் இதயத்தையும் பாதித்தன. ஓர் தாய் அல்லது தந்தை தங்கள் குழந்தையை மறப்பது அரிதாயினும், அவை சாத்தியமே. ஆனால் தேவன்? நிச்சயமாக இல்லை. “நான் உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.
தேவனுடைய பதில்கள் எனக்கு பயத்தை மேலும் வரவழைத்திருக்கும். ஆனால் அவர் என் மேல் நினைவாயிருந்து கொடுக்கும் சமாதானம் எனக்கு உறுதியாக தேவைப்பட்டது. பெற்றோர் அல்லது வேறு எவரையும்விட தேவன் மிகவும் நெருக்கமானவர் என்பதைக் கண்டறியும் தொடக்கமாக இவை இருந்தது; மேலும், அவர் எல்லாவற்றிலும் நமக்கு உதவுவதற்கான வழியை அறிந்திருக்கிறார் – நமது பக்குவமற்றபயங்களில் கூட.
– ஆனிசிட்டாஸ்
சிந்தனை
நீங்கள் எவ்வித பயங்களை எதிர்கொள்கிறீர்கள்? அவற்றை எதிர்கொள்ள நீங்கள் தேவனுடைய உதவியை எவ்வாறு நாடலாம்?
தகப்பனே, அதிகப்படியான எனது உணர்ச்சிகளையும் பயங்களையும் கட்டுப்படுத்த உதவி, என்மீது கிருபையாக இருப்பதற்கு உமக்கு நன்றி.
|
|