வாசிக்கவும்: கொலோசெயர் 3:18-25

“எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:24)

தி செகண்ட் ஷிப்ட் என்ற புத்தகத்தில், வேலைக்குச் செல்லும் தம்பதிகள் வீட்டுப் பொறுப்புகளை எவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை ஆர்லி ஹோச்சைல்ட் விவரிக்கிறார். கணவன்-மனைவி இருவரும் தொழில் செய்யும்போது வீட்டு வேலைகளை இருவரும் பிரித்து செய்வது மட்டுமே நியாயம் என்று பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும்கூட, ஆண்கள் தங்கள் பங்கைவிட குறைவாகவே வேலை செய்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஏன்? சாத்தியமான ஓர் காரணம் என்னவென்றால், இன்று ஒரு கணவன் தனது கடமைகளை அவரது தந்தை வீட்டிற்காக எவ்வளவு செய்தார் என்பதோடு ஒப்பிடுகிறார். ஆனால் இன்று ஓர் வேலை செய்யும் மனைவி அதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறாள்.

இதன் ஓப்பீட்டுன் விளைவு மோதலுக்கு ஆதாரமாகின்றன. இருப்பினும், ஹோச்சைல்ட் ஒரு ஆழமான சத்தியத்திற்குள் நம்மை வழிநடத்துகிறார். அவர் எழுதுகிறார், “இரண்டு பேரும் தொழில் செய்யும் குடும்பங்களுக்குள் போராட்டம் உருவாகும்போது, யார் என்ன செய்கிறார்கள் என்பது அரிதாகவே இருக்கும். நன்றியறிதலைக் கொடுப்பதும் பெறுவதும்தான் மேலோங்கியிருக்கும் . . . என் நேர்காணல்களில், வியக்கத்தக்க எண்ணிக்கையிலான பெண்கள் தங்கள் தந்தைகள் தங்கள் தாய்க்கு அன்பினால்’ அல்லது கரிசனையினால் உதவி செய்வதைப் பற்றி பேசினர். . . ஆனால் ஒரு ஆணும் அவ்வாறில்லை. . . வீட்டில் உதவிக்கும் அன்புக்கும் இடையே இந்த இணைப்பை ஏற்படுத்துங்கள்.”

நாம் செய்யும் செயல்களால் மட்டுமல்ல, அதைச் செய்வதற்கான காரணத்தினாலும் அன்பு வளர்கிறது (கொலோசெயர் 3:23).

நாம் சரியானதைச் செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார், மேலும் அவர் மீதுள்ள அன்பினால் அவ்வாறு செய்யவேண்டும்.

-மார்ட் டிஹான்

Lஆண்டவரே, அன்பான இதயத்தை எனக்குத் தாரும்,
கொடுக்கவும் பகிர்ந்துகொள்ளவும் வாஞ்சிக்கிறேன்,
நான் மிகவும் கரிசனைக் காட்டுவதே
என் உதடுகளின் ஒரு எளிய ஜெபம்.
– பிராண்ட்

நாம் நேசிக்காமல் கொடுக்கலாம், ஆனால் கொடுக்காமல் நேசிக்க முடியாது.