வாசிக்கவும்: எபேசியர் 5:22-33

“எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.” (எபேசியர் 5:33)

நான்சி ஆண்டர்சன் தனது கிறிஸ்தவ நம்பிக்கையில் யதார்த்தமானவராக வளர்ந்ததாகவும், அதனால் “நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன்” என்ற உலகத்தின் பொய்யை நம்புவதாகவும் கூறுகிறார். அதுவே திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு வழிவகுத்தது; மேலும், அவரது திருமண பந்தத்தை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது. “வேறொருவரின் கதையாக மாறாமல்” அவர் தனது துரோகத்தின் வலிமிகுந்த கதையை “அவாய்டிங் தி கிரீனர் கிராஸ் சிண்ட்ரோம்” என்ற புத்தகத்தில் எழுதினார்.

நான்சி தனது புத்தகத்தில், உங்கள் திருமணத்தை பாதுகாப்பதற்கும், “சிறப்பான நல்ல திருமணத்தை” உருவாக்குவதற்கும் “எல்லைகளை” எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த ஆறு செயல் பரிந்துரைகளை வழங்குகிறார்.

செவிகொடுத்தல் – உங்கள் மனைவியிடம் செவிகொடுத்து கேளுங்கள்.
உற்சாகப்படுத்துதல் – நேர்மறை குணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் மனைவியை மேம்படுத்துங்கள்.
நேரம் கொடுத்தல் – ஒன்றாக சிரித்து விளையாடி மகிழுங்கள்
பாதுகாத்தல் – தெளிவான எல்லைகளை அமைப்பதன் மூலம் பாதுகாப்புகளை நிறுவுதல்.
கற்றல் – உங்கள் துணையை உண்மையாகப் புரிந்துகொள்ள அவரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
திருப்திபடுத்தல் – ஒருவருக்கொருவர் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

வேலியின் மறுபக்கத்தில் உள்ள புல் பசுமையாகத் தோன்றலாம், ஆனால் தேவனுக்கு உண்மையாக இருப்பதும், உங்கள் மனைவியிடம் உள்ள அர்ப்பணிப்பும் மட்டுமே மன அமைதியையும் திருப்தியையும் தருகிறது. உங்கள் மனைவியை நேசிப்பதன் மூலமும் மரியாதை செய்வதன் மூலமும் நீங்கள் பசுமை-புல் நோய்க்குறியைத் தவிர்க்கும்போது, உங்கள் திருமணம் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு கிறிஸ்துவையும் அவருடைய தேவாலயத்தையும் பற்றிய ஓர் பிரதிபலிப்பாக இருக்கும். (எபேசியர் 5:31-32)

—அன்னி செடாஸ்

பிறருடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது,
உங்களுக்கு சொந்தமானதைவிட இது சிறந்தது என்று கருதினால்,
தேவன் கொடுத்ததை மட்டும் நினைவில் வையுங்கள்
அது உங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
-ஹெஸ்

மூன்றாவது நபராய் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே ஓர் திருமணத்தை செயல்படுத்தி நிலைநிறுத்த முடியும்.