வாசிக்கவும்: 1 பேதுரு 3:1-12

“அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், . . . நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7)

நானும் என் மனைவியும் சில நண்பர்களுடன் மதிய உணவிற்கு வெளியே சென்றபோது, கணவன் காரின் பயணிகள் பக்கமாகச் சென்று தனது மனைவிக்காக கதவைத் திறந்ததை நான் கவனித்தேன். நான் அவரிடம், “சில பெண்கள் அதை இழிவாகக் கருதலாம்” என்றேன். “அது சரிதான்” என்றான். “ஒரு பெண் நான் அதைச் செய்வதைப் பார்த்து, ‘அவள் தனக்கான கதவைத் திறக்கும் திறன்கொண்டவள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!’ நான் அப்பெண்மணியிடம், ‘என் மனைவி திறமையற்றவள் என்றெண்ணி நான் கதவைத் திறக்கவில்லை, அவளைக் கௌரவிப்பதற்காக இதைச் செய்கிறேன்” என்று கூறினேன்.

இயேசு பெண்களை மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தினார் (யோவான் 4:1-38; 8:3-11; 19:25-27). அவ்வாறே, 1 பேதுரு 3:7-ல், புருஷர்கள் தங்கள் “மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால் . . . விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்ய” அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பலவீனங்கள் உள்ளன, ஆனால் பொதுவாக, பெண்கள் ஆண்களைவிட உடல் ரீதியாக பலவீனமானவர்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் உணர்திறன்களைக் கொண்டுள்ளனர். இது எந்த வகையிலும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அர்த்தம் ஆகாது. உண்மையில், பேதுரு கிறிஸ்தவர்களாகிய ஆண்களும் பெண்களும் “நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள்” என்று கூறினார் (வச. 7).

ஒரு பெண்ணுக்குக் கதவைத் திறந்துவிடுதல் பழங்கால மரியாதையாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால், ஒருவர் மற்றவர்மீது வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அது அடையாளப்படுத்தினால் அவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் அற்புதமான புகழாகாரமாக அமையும்.

-டென்னிஸ் டிஹான்

“உங்கள் துணையின் தேவையைப் கவனியுங்கள்,
அன்பு அன்பான செயலைக் கோருகிறது;
நீங்கள் அவளை உண்மையாக நேசிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்,
அதை நீங்கள் செய்யும் செயல்களால் நிரூபித்துக் காட்டுங்கள்”
– அனான்.

நாம் ஒருவரையொருவர் கனப்படுத்தும்போது தேவனை கனப்படுத்துகிறோம்.