வாசிக்கவும்: ஆதியாகமம் 2:18-25

“தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே . . . ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” (எபேசியர் 5:28-29)

நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடிய உறவைப் பற்றி நாம் ஏன் சில சமயங்களில் பிடிவாதமாக அலட்சியமாக இருக்கிறோம்?

தேவனுடனான நமது உறவுக்கு வெளியே, எவருடனும் நாம் வைத்திருக்கும் மிக முக்கியமான தொடர்பு, நம் துணையுடன் பகிர்ந்துகொள்வதுதான் என்பது இரகசியமல்ல. இன்னும் எத்தனை முறை அந்த உறவை அதற்குத் தேவையான கவனத்துடன் நாம் நடத்துகிறோம்?

தேவன் ஏதேன் தோட்டத்தில் திருமணத்தை நியமித்தபோது, அவர் நமக்கு ஓர் குறிப்பிடத்தக்க பந்தத்தை ஏற்படுத்தினார். அவை வளர்ச்சியடையும்போதுதான், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், நிறைவையும், நோக்கத்தையும், பெருக்கத்தையும் தருகிறது. இரண்டு நபர்களுக்கு இடையிலான இந்த நெருங்கிய தொடர்பின் முரண்பாடு என்னவென்றால், அவை வளர்ச்சிப்பெறாதபோது, விரக்தி, வேதனை, துக்கம், கோபம் மற்றும் கசப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும். அதனால்தான் இந்த முக்கியமான உறவைப் பற்றி நாம் ஏன் பிடிவாதமாக அலட்சியமாக இருக்கிறோம் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட நாட்களில், நாம் விரும்பும் ஒருவருக்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில், திருமண பந்தத்தைப் பிரகாசமாக்கும் குணங்களை வெளிப்படுத்துவது எளிது. ஆனால் இதை நாம் அனுதினமும் செய்யவேண்டாமா?

இந்த உறவை நாம் எப்போதும் நேசிக்கவும், மதிக்கவும், போற்றவும், தொடர்புகொள்ளவும், மன்னிக்கவும், மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டாமா? நம் திருமணத்தில் தேவன் நமக்காக நியமித்துவைத்துள்ள மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க விரும்பினால் நிச்சயமாக செய்வோம்.

-டேவ் பிரானன்

“புறக்கணிக்கப்பட்ட திருமணம்
வலியையும் கசப்பையும் தருகிறது;
ஆனால் அனுதினம் வளர்க்கப்படும் ஒன்று
அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.”
– ஓவன்

வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளாவிட்டால், திருமணப் பந்தங்கள் அதிக மதிப்புடையவையாகாது.