banner image

பலங்கொண்டு திடமனதாயிருங்கள்…நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம். உபாகமம் 31:6, 8

அநேக ஜெர்மானிய சபை தலைவர்கள் ஹிட்லரின் அடக்குமுறைக்கு அடங்கிவிட்டனர். ஆனால் இறையியலாளரும் போதகரும் ஆன மார்டின் நீ மோலர் நாசிகளை தைரியமாய் எதிர்த்தவர்களுள் ஒருவர். 1970 களில் நடந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு கதையைப் படித்தேன். ஒரு பெரிய விடுதிக்கு வெளியே வயதான ஜெர்மானியர்கள் குழு நின்றுகொண்டிருக்க ஓர் இளைஞர் குழுவினரின் பெட்டிகளை எடுத்து வைப்பதில் பரபரப்பாக இருந்தார்.யாரோ அவர்கள் யார் என்று விசாரிக்க “ஜெர்மன் போதகர்கள்” என்று பதில் வந்தது. ”அந்த இளைஞர்?” “அவர் மார்டின் நீ மோலர்- அவருக்கு எண்பது வயது. அவர் பயமற்றவர் என்பதால் என்றும் இளமையாகவே இருக்கிறார்”.

நீ மோலர் பயத்தை எதிர்த்ததற்கு அவருக்கு ஒன்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட பயத்தை எதிர்க்கும் மரபணு ஒன்றுமில்லை.ஆனால் கர்த்தரின் கிருபையால் மட்டும்தான்.உண்மையில் ஒரு சமயத்தில் அவருக்கு மதவெறி எதிர்ப்பு இருந்தது. ஆனால் அவர் மனம் வருந்திய தால் தேவன் மீட்டார், மெய்யான வற்றை பேசவும் வாழவும் உதவினார்.

மோசே இஸ்ரவேலரை பயத்தை எதிர்த்தும் தேவனை உண்மையாய் பின்பற்றவும் ஊக்கப்படுத்தினார். மோசே எடுத்துக் கொள்ளப்படுவார் என்று அறிந்த மக்கள் பயப்பட்டபோது மோசே தளராத வார்த்தைகளைச் சொன்னார்: “பலங்கொண்டு திடமனதாயிருங்கள். பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்” (உபாகமம்31:6). நிச்சயமில்லாத எதிர்காலத்தைப்பற்றி நடுங்க எந்த காரணமும் இல்லை. ஆனால் ஒரு காரணமுண்டு: தேவன் அவர்களோடே இருக்கிறார்.

இருள் எந்த நெருக்கடியை தந்தாலும் பயங்கரங்கள் எந்த தாக்குதல்களை நடத்தினாலும்- தேவன் உன்னோடே இருக்கிறார். தேவனின் இரக்கத்தினாலும், நீங்கள் பயத்தை தேவ ஞானத்துடன் எதிர்கொள்ளவேண்டும் “அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை” (வ.6,8).

சிந்தனை

நீங்கள் எந்த பயங்களை எதிர்கொள்கிறீர்கள்? தேவபிரசன்னம் உங்கள் இருதயத்துக்கு தைரியத்தை எப்படி கொண்டு வருகிறது?

நாம் பயப்படாமல் வாழ்கிறோம் என்பதற்கு நாம் பயத்தை உணரவில்லை என்று அர்த்தம் இல்லை, ஆனால் அதற்கு கீழ்ப்படிவதில்லை என்று அர்த்தம்.