எபேசியர் 1:12
அவருடைய தீர்மானத்தின்படியே …
கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நேசிக்கப்பட்ட மற்றும் மதிப்புமிக்க
சாரியட்ஸ் ஆப் ஃபயர் என்னும் 1981 ன் திரைப்படம் (1924ல் நடந்த ஒலிம்பிக்கில் இரண்டு பிரிட்டிஷ் விளையாட்டு வீரர்கள் எரிக் லிட்டெல் மற்றும் ஹரோல்ட் ஆபிரகாம் இடையே நடந்த போட்டியை மீண்டும் நினைவு படுத்தும்). லிட்டெல் தாம் ஓடுவதற்கு காரணம்:”நான் ஓடும் போது தேவனின் மகிழ்ச்சியை உணருகிறேன்”. ஆபிரகாம் (யூத புலம் பெயர்ந்தவராக வாழ்நாள் முழுதும் கிண்டல் செய்யப்பட்டவர்) வேறு ஒரு காரணத்தை அளிக்கிறார். ஓடுவது “என் முழு இருப்பை நியாயப்படுத்த பத்து தனிமையான நொடிகளை தருகிறது”. ஆபிரகாம் தாம் ஓட வேண்டியது, போட்டியில் வெற்றி பெறவும், தம் வாழ்வின் அர்த்தத்தை நிரூபிக்கவும் என்று உணர்ந்தார்.
வேதம் சொல்கிறது நமக்கு மதிப்பு உண்டு ஏனெனில் தேவன் நம்மை அவர் பிள்ளைகளாக உண்டாக்கினார். நாம் அவருக்கு ஒன்றும் வழங்கிய தாலோ அல்லது சாதித்ததாலோ அன்று.”தேவன்… சகல ஆசிர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்”. நாம் என்ன திருப்பித் தரப் போகிறோம் என்ற எண்ணம் இன்றி ஆசீர்வதித்திருக்கிறார் (எபேசியர் 1:3). தேவன் நம்மீது கண்களை பதித்திருக்கிறார் ஏனெனில் அது “அவருக்கு அதிக புகழ்ச்சியை தருகிறது” நம்மை தம்முடைய வராக ஏற்க (வசனம் 5). நாம் தேவனின் பெருந்தன்மையை நம்மை சுத்திகரித்து கொள்வதாலோ, நல்ல கிரியைகளாலோ அல்லது நம் ஒழுக்கத்தினாலோ நாம் சம்பாதிப்பது அல்ல. இல்லை,” தேவன் நம்மை நேசிக்கிறார்” மற்றும் தம் குடும்பத்தின் பங்காயிருப்பதற்கு நம்மை வரவேற்கிறார் (வசனம் 4-5). அவர்” நம் விடுதலையை தம் குமாரனின் இரத்தத்தால் வாங்கி, நம் பாவங்களை மன்னித்தார்” (வசனம். 7). நம் மதிப்பு, நாம் தேவனுக்கு ஏதாவது செய்கிறோம் என்பதால் அன்று, ஆனால் அவர்தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் நமக்கு அனைத்தையும் முன்பே சாத்தியமாக்கியதால் தான்.
நம் மதிப்பை எப்போதும் மதிப்பிடும் இந்த உலகத்தில் தேவனின் எல்லையற்ற அன்பே நற்செய்தியாகும். அவர் அன்பே ஈவாகும்; நம் வேலை அதைப் பெற்றுக் கொள்வதாகும். இந்த ஈஸ்டரில் அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பின் அதிசயத்தை பிரதிபலிப்போம்.
வின் கோலியர்
நீங்கள் எப்போது ஏற்றுக் கொள்வதன் அவசியத்தை அல்லது உங்கள் மதிப்பை நிரூபிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தீர்கள்? நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் அன்பாய் இருக்கிறார் என்று அறிவது இதற்கு எப்படி முரண்படுகிறது?
அன்புள்ள தேவனே, இந்த உலகில், என் இடத்தை சம்பாதிக்க முயற்சி செய்து நான் சோர்வடைந்து விட்டேன். நீங்கள் என்னை உண்மையில் எந்த அளவு நேசிக்கிறீர் என்பதை நிரூபிக்க சிலுவைக்கு சென்ற உமக்கு நன்றி.
இன்றைய வேத பகுதி | எபேசியர் 1:3-14
3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறி ஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்
4 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறி ஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்
5 பிரிய மானவருக்குள் நாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய் தமக்கு சுவீகார புத்திராகும்படி முன் குறித்திருக்கிறார்.
7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருக பண்ணினார்.
9 காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின் படி பரலோகத்தில் இருக்கிற வைகளும் பூலோகத்தில் இருக்கிறவைகளும் ஆகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளேகட்டப்பட வேண்டுமென்று
10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
11 மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கையாய்இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயி ருக்கும் படிக்கு,
12 தமது சித்தத்தின் ஆலோசனைக்கு தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரம் ஆகும்படி தெரிந்துகொள்ளப் பட்டோம்.
13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம் ஆகிய சத்திய வசனத்தை கேட்டு விசுவாசிகளான போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்குள்முத்திரை போடப்பட்டீர்கள்
14 அவருக்கு சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப் படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாய் இருக்கிறார்.