banner image

மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 2 கொரிந்தியர் 12:15

ஒருதரம், “பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்” (ரோமர் 5:5); பிறரின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் ஆர்வங்கள் மற்றும் நோக்கங்களுடன் நாம் வெளிப்படையாகவே நாம் ஒன்றுவதைக் காணத் தொடங்குகிறோம். மேலும் இயேசு ஒவ்வொரு தனி நபர் மீதும் அக்கறை கொண்டுள்ளார். நம்முடைய சொந்த நலன்கள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுவதற்குக் கிறிஸ்தவ சேவையில் நமக்கு உரிமை இல்லை. உண்மையில், இது இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவின் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றாகும். தியாகத்தின் மகிழ்ச்சி யாதெனில், என் நண்பரான இயேசுவுக்காக நான் என் ஜீவனைக் கொடுப்பதுதான் (பார்க்க யோவான் 15:13). நான் என் வாழ்க்கையைத் தூக்கி எறியவில்லை, ஆனால் நான் விருப்பத்துடன் வேண்டுமென்றே அதை அவருக்காகவும் மற்றவர்களின் நலன்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். என்னுடைய சொந்த காரணத்திற்காகவோ அல்லது நோக்கத்திற்காகவோ நான் இதைச் செய்யவில்லை. பவுல் தன் வாழ்நாளை ஒரே ஒரு நோக்கத்திற்காகச் செலவிட்டார், அது ஜனங்களை இயேசு கிறிஸ்துவிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காக. பவுல் எப்பொழுதும் ஜனங்களை தன் ஆண்டவரிடம் ஈர்த்தார், தன்னிடமல்ல. “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” (1 கொரிந்தியர் 9:22) என்றார்.

பரிசுத்தமான வாழ்க்கையை வளர்த்துக்கொள்ள எப்போதும் தேவனுடன் தனியாக இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கும் போது, அவரால் மற்றவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இது தன்னை ஒரு பீடத்தில் அமர்த்தி, சமுதாயத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்துவது போன்றது. பவுல் ஒரு பரிசுத்தவான், ஆனால் அவர் எங்குச் சென்றாலும் இயேசு கிறிஸ்து எப்போதும் தனது வாழ்க்கையில் கிரியை செய்ய அனுமதிக்கப்பட்டார். நம்மில் பலர் நம் சொந்த இலக்குகளில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர், மேலும் இயேசு நம் வாழ்வில் கிரியை செய்ய முடியாது. ஆனால் நாம் முழுவதுமாக அவரிடம் சரணடைந்தால், நாம் அடைவதற்கென்று நமக்குச் சொந்த இலக்குகள் எதுவும் இல்லை. வெறுப்பில்லாமல் “கால் மிதியாக” இருப்பது எப்படி என்று தனக்குத் தெரியும் என்று பவுல் கூறினார், ஏனென்றால் அவருடைய வாழ்க்கையின் உந்துதல் இயேசுவின் மீதுள்ள பக்தி. நாமும் அர்ப்பணிப்புடன் இருக்க முனைகிறோம், இயேசு கிறிஸ்துவுக்கு அல்ல; அவரிடம் முழுமையாகச் சரணடைவதை விட அதிக ஆவிக்குரிய சுதந்திரத்தை அனுமதிக்கும் விஷயங்களில். இந்த சுதந்திரம் பவுலின் நோக்கம் அல்ல. சொல்லப்போனால், அவர் “என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.” (ரோமர் 9:3) என்றும் கூறியுள்ளார். பவுல் பகுத்தறியும் திறனை இழந்துவிட்டாரா? இல்லை! அன்புகொண்ட ஒருவருக்கு இது மிகையாகாது. பவுல் இயேசு கிறிஸ்துவை நேசித்தார்.

சிந்தனை
தேவனுக்குப் பயப்படுவதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நீங்கள் தேவனுக்குப் பயப்படுகையில், வேறு எதற்கும் பயப்படுவதில்லை; அதேசமயம் நீங்கள் தேவனுக்குப் பயப்படவில்லை என்றால் மற்ற அனைத்திற்கும் பயப்படுகிறீர்கள். “கர்த்தருக்குப் பயப்படுகிற யாவரும் பாக்கியவான்கள்.”