இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன் (வ. 8). (ரோமர் 12:7-9)

சமீபத்தில் எனது மகனின் கால்பந்து அணி வீரர்கள் மூவர், வார இறுதியை எங்களுடன் கழித்தனர். சனிக்கிழமையன்று அவர்கள் என்னுடைய சில நண்பர்களின் வீட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தனர். ஆண்டர்சன்கள் (என் நண்பர்கள்) விருந்தினர்களை எதிர்பார்க்கவில்லை என்றாலும், தங்கள் வீட்டிற்கு வந்தவுடன் சிறுவர்களிடம் விருந்தோம்பலை பொழிந்தனர்.

அவர்களின் தயவு உண்மையிலேயே ஒரு அடையாளத்தை விட்டுச் சென்றது. எனவே அடுத்த நாள் காலை, சிறுவர்களிடம், ஆண்டர்சனின் தேவாலயத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா அல்லது வேறு இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா என்று நான் கேட்டபோது, அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. “ஆன்டர்சன் தேவாலயம்!” என்று அந்த சிறுவர்கள் ஒருமையில் கூச்சலிட்டனர்.

என் மகனின் அணியினரை அறியாதிருந்தும், ஆண்டர்சன்கள் அந்நியர்களிடம் உண்மையிலேயே தயவு காட்டினார்கள் (எபிரேயர் 13:2). அந்த வார இறுதிக்கு முன்பு, இதுவரை தேவாலய ஆராதனையில் கலந்து கொள்ளாத சிறுவர்கள் மீது, இது ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியது.

விருந்தோம்பலையும் தயவையும் தங்கள் வாழ்க்கையின் வர்த்தக முத்திரைகளாக அனுமதிப்பதன் மூலம், என் நண்பர்கள், இயேசுவின் விசுவாசிகளுக்கு தேவன் கொடுத்த வரங்களை பயன்படுத்த வேண்டும் என்று ரோமர் 12:8 உள்ள சாராம்சத்தின்படி வாழ்கிறார்கள். ஒவ்வொரு வரத்திற்கும், ஒரு செயல் தேவை: “புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.”

தயவுக்கு விடையளிக்கும் வகையில், ஒரு தேவாலத்திற்குள் நுழைய ஆர்வமாக திருச்சபையில் சேராதிருந்த மூன்று சிறுவர்கள் இருந்தனர், அங்கு அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டனர். அந்த வரவேற்புச் சூழலில் அவர்கள் வாழ்வில் முதல்முறையாக இயேசுவின் நற்செய்தியைக் கேட்டனர்.

நாம் தயவையும் விருந்தோம்பலையும் வழங்கும்போது, தேவனுக்கு நண்பர்களையும் அந்நியர்களையும் அறிமுகப்படுத்துவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.” (எபேசியர் 1:7). தயவும் விருந்தோம்பலும் அவரிடமிருந்து பொங்கி வழிகின்றன!

ஆசிரியர்: ரோக்ஸின் ராபின்ஸ்

சிந்தனை

கொலோசெயர் 3:12-ஐப் வாசித்து, தயவை “தரித்துக்கொண்டு” என்பதின் பொருள் என்ன என்பதைக் கவனியுங்கள்.
மற்றவர்களை நேசிப்பதற்கும் சேவை செய்வதற்கும் தேவன் உங்களுக்குக் கொடுத்த வரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? இன்று நீங்கள் யாரிடம் தயவையும் விருந்தோம்பலும் காட்டலாம்?

 

 

 

banner image