ரூத்தை மணந்தவரின் பெயர் என்ன?” என்று கேட்டார். ஆறு வயது டாமி நம்பிக்கையுடன், “போவாஸ்!” என்று கத்தினான். ஆசிரியர் மற்றொரு கேள்வியை தொடர்ந்தார்: “ரூத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பாத மற்றொருவரின் பெயர் என்ன?” மற்றொரு மாணவர், “என் நண்பரே!”… (ரூத் 4:1)

வேதத்தில் ரூத்தின் கதையை விவரித்த பிறகு, ஆசிரியர் தனது ஞாயிறு பள்ளி வகுப்பில், “ரூத்தை மணந்தவரின் பெயர் என்ன?” என்று கேட்டார். ஆறு வயது டாமி நம்பிக்கையுடன், “போவாஸ்!” என்று கத்தினான். ஆசிரியர் மற்றொரு கேள்வியை தொடர்ந்தார்: “ரூத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பாத மற்றொருவரின் பெயர் என்ன?” மற்றொரு மாணவர், “என் நண்பரே!” (ரூத் 4:1) என்று சத்தத்தை உயர்த்தி சொன்னான்.

வெளிப்படையாகவும் ஆர்வமாகவும், மற்ற உறவினரின் பெயர் இந்தக் கதையில் குறிப்பிடப்படவில்லை. போவாஸ் ஒருவேளை அவரை அறிந்திருப்பார். அவரைப் பெயர் சொல்லியும் அழைத்திருப்பார். பரிவர்த்தனை சட்டப்பூர்வமாக இருக்க அவரது பெயர் முக்கியம். ஆனால் இந்தக் கதையில், ஆசிரியர் வேண்டுமென்றே அவருடையப் பெயரை தவிர்த்திருக்கிறார். அதுவுமலாமல் அவரைப் பற்றிய முக்கியமான விவரங்களை வழங்கவில்லை. “எனது நண்பன்” (4:1) என்று மொழிபெயர்க்கப்பட்ட பெலோனி அல்மோனி என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், “அப்படியானால்”! எபிரேய சொற்றொடரின் சரியான அர்த்தத்தை தெரிவிக்க, NET வேதாகமம் அவரை “ஜான் டோ” (4:1 NET)” என்று அழைக்கிறது – சில சமயங்களில் ஒரு நபரின் உண்மையான அடையாளத்தை மறைக்க இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது.

ரூத்தின்மீதும் நவோமியின்மீதும் பொறுப்பை ஏற்க இயலாமை அல்லது விருப்பமின்மையால் ஏற்பட்ட சங்கடத்திலிருந்து அவரைக் காப்பாற்ற கதையாசிரியர் விரும்பினார் என்று சில அறிஞர்கள் விளக்குகிறார்கள். இருப்பினும், ரபினிய மரபுகள், தனது சொந்த பரம்பரை மற்றும் சந்ததியினரைப் பற்றி கவலைப்படுவதால் ஒரு உறவினரின் பெயரைப் பாதுகாக்க நிலைநிருத்தாதவருக்கு செய்யப்படும் கவிதை நீதி என்று கூறுகின்றன. இன்று, அவருடைய பெயர் கூட நமக்கு தெரியாது!

இன்று, சாட்சிகள் முன்னிலையில் இருதரப்பினர் புள்ளியிடப்பட்ட கோட்டில் கையெழுத்திடும் போது பெரும்பாலான பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் ரூத்தின் நாட்களில், “மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு” (4:7). ரூத்தின் கதை எழுதப்பட்ட காலத்தில், வணிக பரிவர்த்தனைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு காலணி பரிமாற்றம் நடைமுறையில் இல்லை என்று தோன்றுகிறது, எனவே அடைப்புக்குறிக்குள் அதற்கான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

வேதத்தில், பாதங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் அடையாளப்படுத்துகின்றன (சங்கீதம் 8:6; எபேசியர் 1:22). இவ்வாறு பாதரட்சையைக் கழற்றுவது, பெயரிடப்படாத உறவினர், நிலத்தின் மீதான அனைத்து உரிமைகளையும் துறப்பதைக் குறிக்கிறது.மேலும் போவாஸுக்கு பாதரட்சையைக் கொடுப்பது, போவாஸுக்கு இப்போது அந்த நிலத்தில் நடக்க உரிமை உள்ளது என்பதை அடையாளப்படுத்துகிறது (யோசுவா 1:3-ஐ பார்க்கவும்; 14:9).

போவாஸ் ரூத்தை திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். போவாஸ், தான் ஏன் பாதுகாவலர்-மீட்பாளர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்று போவாஸ் விளக்குகிறார். போவாஸ் ரூத்தை “தனது சொத்துடன் மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்” என்று போவாஸ் கூறினார் (4:5, 10). என்ன ஒரு தன்னலமற்ற அன்பு!

அவரது பகுதி முடிந்ததும், நெருங்கிய உறவினரான மற்ற நபர் வரலாற்றின் பக்கங்களில் மறைந்துவிட்டார், அவரது பெயர் மறந்துவிட்டது. இன்று, அசாதாரணமான உடன்படிக்கையை அன்புடன் செயல்படுத்திய தாராள மனப்பான்மையும் கருணையும் கொண்ட உறவினரான (4:14) போவாஸின் பெயரை மட்டுமே நாம் அறிவோம். கூடுதலாக, போவாஸை இஸ்ரவேலின் மிகவும் பிரியமான ராஜாவும், உலகின் தலைசிறந்த ராஜாவின் மூதாதையராக நாம் அறிகிறோம் (ரூத் 4:22; மத்தேயு 1:5-16). உண்மையில், எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் நமக்கு உறுதியளிக்கிறார். “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். (எபிரெயர் 6:10-12).

 

சிந்தனை

நற்பெயரைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி நீதிமொழிகள் 22:1 என்ன சொல்கிறது? நீதிமொழிகள் 3:3-4-ன்படி, நாம் எப்படி நற்பெயரைக் காத்துக்கொள்ளலாம்?
எபிரெயர் 6:10-11 எவ்வாறு நீங்கள் தொடர்ந்து சேவை செய்யவும் மற்றவர்களுக்கு உதவவும் உங்களைத் தூண்டுகிறது?

 

 

banner image