அவள் (தபீத்தாள்) நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அப்போஸ்தலர் 9:36
“எஸ்டெரா, நமது நண்பர் ஹெலனிடமிருந்து உனக்கு ஒரு பரிசு வந்துள்ளது!” என்று என் அம்மா வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சொன்னார். வளரும்போது எங்களிடம் அதிகம் இல்லை, எனவே அஞ்சலில் பரிசு பெறுவது, இரண்டாவது கிறிஸ்துமஸை கொண்டாடினது போல் இருந்தது. இந்த அற்புதமான பெண்ணின் மூலமாக நான் தேவனால் நேசிக்கப்பட்டதாகவும், நினைவுகூரப்பட்டதாகவும், மதிக்கப்படுவதாகவும் உணர்ந்தேன்.
ஏழை விதவைகள், தபீத்தாள் (தொற்காள்) ஆடைகளை உருவாக்கிய போதும் அவ்வாறே உணர்ந்திருக்க வேண்டும். அவள் யோப்பாவில் வாழ்ந்த இயேசுவின் சீஷி. அவள் தனது தயவின் செயல்களுக்காக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவள். அவள் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்” (அப்போஸ்தலர் 9:36). பின்னர் அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள். அந்த நேரத்தில், பேதுரு, அருகிலுள்ள நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார், எனவே இரண்டு விசுவாசிகள் அவரைப் பின்தொடர்ந்து யோப்பாவுக்கு வரும்படி வருந்தி அழைத்தனர்.
பேதுரு வந்தபோது, தபித்தாவால் உதவி பெற்ற விதவைகள், அவளுடைய தயவின் அத்தாட்சியைக் “அவள் செய்த வஸ்திரங்களையும் அங்கிகளையும்” (வச. 39) காட்டினார்கள். அவர்கள் அவரைத் தலையிடச் சொன்னார்களா என்பது நமக்கு தெரியாது, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் மூலம் பேதுரு ஜெபித்தார். தேவன் அவளை மீண்டும் உயிர்ப்பித்தார்! தேவனின் தயவின் விளைவு என்னவென்றால், “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.” (வச. 42).
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நாம் தயவு காட்டுவதால், அவர்கள் தங்கள் எண்ணங்களை தேவனிடம் திருப்பி, அவரால் மதிக்கப்படுவார்கள்.
ஆசிரியர்: எஸ்டெரா பிரொஸ்கா எஸ்கொபார்
Thought
தேவனின் தயவின் உயிருள்ள வெளிப்பாடாக இருங்கள்: உங்கள் முகத்தில் தயவுள்ளவர்களாகவும், உங்கள் கண்களில் தயவுள்ளவர்களாகவும், உங்கள் புன்னகையில் தயவுள்ளவர்களாகவும் இருங்கள். அன்னை தெரசா
அன்புள்ள ஆண்டவரே, உம்மைப் பின்தொடரவும், என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் தயவு காட்டவும் எனக்கு உதவும். அதின்மூலம் அவர்கள் என்னில் உம்மைக் காண முடியும்.
|
|
|