வாசிக்க: 1 சாமுவேல் 24:1-22

ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். (நீதிமொழிகள் 29:8)

“உன் கோபத்தை என்னால் உணர முடிகிறது. நான் பாதுகாப்பற்றவன். உன் ஆயுதத்தை எடு! உனது வெறுப்பு முழுவதும் தீர என்னைத் தாக்கு, இருண்ட பக்கத்தை நோக்கிய உன் பயணம் நிறைவடையும்!”

ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடியில் பேரரசராக நடித்தபோது, ​​ஸ்காட்டிஷ் நடிகர் இயன் மெக்டியார்மிட் இந்த சிலிர்க்கும் வசனத்தைப் பேசினார். இந்த மறக்கமுடியாத காட்சியில், பேரரசர் விருதாவாக கதாநாயகன் லூக் ஸ்கைவால்கரை தீமையின் இருண்ட பக்கத்தில் தன்னுடன் இணைக்க முயன்றார். ஆனால் கோபத்தால் கூட லூக்கை தீயவனாக்க முடியவில்லை. ஆனால் அவருடைய ஆத்திரம் மேற்கொண்டு அவரைச் செயல்படும்படி செய்தபோது அது நடந்தேறியது.

தாவீது சவுலின் கொலைவெறிக்கு எதிர்வினையாற்றியிருக்கலாம், மேலும் அவருடைய கோபத்தைக் கொண்டு சரியானதைச் செய்திருக்கலாம் (1 சாமுவேல் 23:15). அவர் கோபமடைந்து, அவரைக் கொல்ல முயன்ற அரசனைக் கொன்றிருக்கலாம் (24:4). ஆனால் அவருக்குத் தீங்கு செய்யத் தன் கைகளைப் பயன்படுத்த விரும்பாமல், சவுலைக் தேவனின் கைகளில் ஒப்புக்கொடுத்தார் (வ. 10). நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு மேசைகளைக் கவிழ்த்து, தேவாலயத்தின் பிராகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைச் சவுக்கினால் விரட்டியபோது தெய்வீகமும் நீதியுமான கோபத்தை வெளிப்படுத்தினார் (மத்தேயு 21:12-13; யோவான் 2:13-22). இயேசு கோபத்தால் ஆட்கொள்ளப்படவில்லை; அவர் தனது பரிசுத்தமும் பரிபூரணமுமான சுபாவத்தையே வெளிப்படுத்தினார். கோபம் கெட்டதாக இருக்கலாம் (லூக் ஸ்கைவால்கர் போல) அல்லது நல்லதாக இருக்கலாம் (கிறிஸ்துவைப் போல).

குறிப்பாகத் தேவனின் நீதியான கோபத்தை எதிர்கொள்வது இனிமையானதல்ல. கோபம் பாவம் அல்ல என்பது ஆறுதலாக இருப்பினும், நாம் கோபத்தைக் கொண்டு என்ன செய்கிறோம்? வெறுப்புக்கு இடமளிக்கிறோமா? இல்லையா? என்பதே வித்தியாசத்தைக் காட்டுகிறது.

இன்று, நம் வாழ்வில் யாரோ அல்லது ஏதோவொன்று நம்மைக் கோபப்பட வைக்கும். அந்நேரத்தில் நாம் தேவனின் வல்லமையால், “ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்” (நீதிமொழிகள் 29:8) என்ற சத்தியத்தின்படி வாழ்வோமாக. அன்பு, பொறுமை மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றில் நாம் வளர உதவும்படி பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்வோம் (கலாத்தியர் 5:22-24).

—ஆண்டி ரோஜர்ஸ்

மேலும் வாசிக்க

மத்தேயு 5:21-25 மற்றும் யோவான் 2:13-22ஐப் வாசித்து. கோபத்தைப் பற்றி இயேசு என்ன வெளிப்படுத்துகிறார் என்பதையும், அவர் நீதியான கோபத்தை கைக்கொண்டதற்கான காரணங்களையும் கவனியுங்கள்.

சிந்திக்க

நீங்கள் கோபத்தில் கடுமையான நேரத்தையோ அல்லது யாராவது உங்களைக் கடுமையாக நடத்தின விதத்தையோ நினைத்துப் பாருங்கள். உங்கள் எதிர்வினை சரியானதா? அந்த அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?