கொலோசெயர் 4:6
உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை
பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

கிருபை வழங்குபவர்கள்

ரம்பத்தில் ஒரு நிர்வாக ஆசிரியராகக் கிளார் இருந்தபோது அவரால் ஒரு தீவிரமான தட்டச்சுப் பிழை ஏற்பட்டு அச்சுக்கு சென்றது. அவர் தவறை பற்றி மனச்சோர்வு அடைந்தார் மற்றும் அவர் சக ஊழியர்களை சில நாட்களாக காப்பி இடைவேளையில் தவிர்த்தார். ஆனால் ஒரு மதியத்தில் தம் தலையை மேசையிலிருந்து நிமிர்த்தி அவருக்கு அடுத்து கம்பெனியின் பிரசிடெண்ட் நிற்பதை கண்டறிந்தார். அவர் கிளாரின் தோள்களை அழுத்தி பிடித்து,” அதை கடினமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நாம் பரலோகத்தில் இல்லை என்பதை நினைவு கூர வேண்டும்” என்றார்.

கிளார் அந்த கடினமான நேரத்தில் அவருக்கு அளித்த கிருபையுள்ள வார்த்தைகளை எப்பொழுதும் நினைவு கூருவார். அவர்தாம் செய்த தவறுகளை யோசிக்கும்படி தூண்டப்படும்போது. அவற்றிலிருந்து கற்க முடியும் என்று உணர்ந்தார் மற்றும் அதே கிருபையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அறிவார்.

யாருக்காவது கிருபையை நீட்டித்து வழங்கினால் அது எதிர்பாராத ஈவு ஆகும்.அது இருதயத்தின் கனத்தை உயர்த்தும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் நம்பமுடியாத கிருபையின் ஒரு கிளையாகும். நம் பாவத்தினால் தேவனிடமிருந்து நித்தியமாக பிரிந்திருக்கும் தகுதி உள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக தகுதி இல்லாத நமக்கு ஓர் ஈவை தந்தார்—அவர் குமாரன், இயேசு தாமே “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவர்” (யோவான் 1:14). இந்த கிருபை- கொடுப்பவர் புனித வெள்ளியின் துக்கத்தை- இயேசு உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியாக மாற்றினார்.

அது எப்பொழுதும் சுலபம் அன்று. ஆனால் நம் இருதயங்கள் தகுதியற்றவர்களுக்கும் தொடர்ந்து “கிருபை” பொருந்தினதாய் இருக்கவேண்டும் (கொலோசெயர் 4:6) தாராள கிருபை- கொடுப்பவர்களாய் நம்மால் மெய்யான கிருபையின் ஆதாரத்தை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்ட முடியும்.

சிண்டி ஹெஸ் காஸ்பர்

நமக்கு தேவனுடைய தாராள கிருபை ஈவு இருப்பதால் நீங்கள் மற்றவர்களுக்கு கிருபை காட்ட வேண்டியது ஏன் முக்கியமாக இருக்கிறது? உங்கள் வார்த்தைகளை “கிருபையால் நிரப்புவதன்” மூலம் நீங்கள் எப்படி கிறிஸ்துவின் அன்பிற்கு உதாரணமாக இருக்க முடியும்?

பிதாவே, மற்றவர்களுக்கு கிருபை காட்ட நான் தயக்கம் காட்டுவதை மன்னியும். துன்பப்படுத்துகிறவர்களுக்கு கிருபையையும் தாராளத்தையும் காட்ட எனக்கு உதவும்.

இன்றைய வேத பகுதி | கொலோசெயர் 4:2-6

2 இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

3 கிறிஸ்துவினுடைய இரகசியத்தின் நிமித்தம் கட்டப்பட்டு இருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேச வேண்டிய பிரகாரமாய்ப் பேசி அதை வெளிப்படுத்துவதற்கு,

4 திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும் படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

5 புறம்பே இருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள்.

6 அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தின தாயும் உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக.

 

banner image