…நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 26:17-18
புதிய ஏற்பாட்டில் இந்த வசனங்கள் தான் இயேசு கிறிஸ்துவின் சீடரின் உட்கருத்தை சிறப்பாக விளக்கும் உதாரணமாக திகழ்கின்றன.
தேவனின் முதன்மையான கிருபையின் உயரிய கிரியை, ”அவர்கள் பாவமன்னிப்பை பெறுகின்றனர்”…..என்ற வார்த்தைகளில் இருக்கின்றன. ஒரு நபர் தம்முடைய சுய கிறிஸ்தவ வாழ்க்கையில் தோல்வியுற்றால் பெரும்பாலாக அவர் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே பொருள். ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டார் என்பதே அவர் இரட்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக திகழ்கின்றது. தேவ ஊழியர்களாய் மக்கள் இருளிலிருந்து ஒளியில் திரும்ப அவர்களின் கண்களைத் திறப்பதே நம்முடைய ஊழியம் ஆகும். ஆனால் அது இரட்சிப்பு அன்று, அது மாற்றம் மட்டுமே- விழிப்படைந்த ஒரு மனிதரின் முயற்சி மட்டுமே. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவ்வாறு உள்ளனர் என்று சொல்லலாம். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன ஆனால் அவர்கள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. மாற்றம் என்பது புது சிருஷ்டி அன்று. இதுவே நம்முடைய இக்காலப் பிரசங்கத்தில் புறக்கணிக்கப்படும் விஷயம். ஒருவர் புது சிருஷ்டியாக இருந்தால், அவர் தேவனிடமிருந்து ஓர் ஈவைப் பெற்றுக் கொண்டார் என்பதை அறிவார். மக்கள் வாக்குத்தத்தங்களை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றலாம், ஆனால் அது மீட்பு அன்று. மீட்பு என்பது தேவனிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பாவமன்னிப்பு பெறுவதாகும்.
இதை, தேவனுடைய கிருபையின் இரண்டாவது உயர்ந்த கிரியை தொடர்கிறது: “…பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களின் சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக”… புது சிருஷ்டியானவர் தம் உரிமைகளை இயேசு கிறிஸ்துவிடம் விட்டுக்கொடுத்து, தேவ ஊழியத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொள்ளுவர்.