மத்தேயு 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச்
சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய
என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
ஒப்புரவுக்கான பசி
ப்ளேசெஸ் இன் த ஹார்ட் என்னும் திரைப்படம் எட்னா ஸ்பால்டிங் என்பவரின் கதையை சொல்கிறது. அவர் இரண்டு குழந்தைகளின் தாய். அவர் கணவர் ராய்ஸ் என்பவரை விலி என்ற சிறுவன் தற்செயலாக கொன்றான். 1930 இல் டெக்சாஸ் நகரில் அமைக்கப்பட்டது, அதன் இறுதிக்காட்சி சபையின் திருவிருந்து ஆராதனையில் அமைக்கப்பட்டது.
அப்பமும் திராட்சை ரசமும் ஒவ்வொருவருக்கும் கடந்து சென்றது. முதல் வரிசையில் எட்னாவின் சகோதரி அமர்ந்திருந்தார். அவர் தம் கணவரை விவாகரத்து செய்ய இருந்தார். ஆனால் இப்போது அன்பாக அவர் கணவரின் கையைப் பிடித்து இருந்தார். அடுத்ததாக மோசே, ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர், எட்னாவுக்கு பண்ணையில் உதவுவார். யுனைடெட் ஸ்டேட்ஸின் அக்கால பிரிக்கப்பட்ட சகாப்தத்தில் அது ஓர் ஆச்சரியமான பார்வை. எட்னா திருவிருந்தை எடுத்த பின்பு ஏதோ ஒன்று நமக்கு பார்க்க அதிர்ச்சி அளிக்கிறது -அவர் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் மீண்டும் உயிர் பெற்ற தம் கணவருக்கு வழங்க, அவர் கணவர் தம்மை கொன்ற வில்லிக்கு வழங்குகிறார்.
இறுதிக் காட்சியில் பார்வையாளர்கள் உடைந்து கண்ணீர் விட்டனர் ஏனெனில் அது நாம் விரும்பும் ஒப்புரவை சித்தரிக்கிறது. இயேசு விளக்கியது போன்று, திருவிருந்தின் அப்பம் அவர் சரீரத்தையும் திராட்சைரசம் இரத்தத்தையும், உடைக்கப்பட்டு, சிந்தப்பட்டு நம்மை ஒப்புரவு ஆக்குகிறது (மத்தேயு 26:26-28). ஒவ்வொருமுறையும் இதைப்போல இயேசுவை நினைவு கூரும்போது அவர் மறுபடி வரும் வரை அவர் மரணத்தை நாம் அறிவிக்கிறோம் (1 கொரிந்தியர் 1:26). அந்த ஒப்புரவு மற்றவர்களுக்கு வழங்கப்படும்போது, திருமணங்கள் சரி செய்யப்பட்டன, இனங்கள் ஒன்றுபட்டன மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் கொலைகாரர்களும் நண்பர்களானார்கள். ஒருநாள், கிறிஸ்து உயிருள்ளவரையும் மரணமடைந்த வரையும் மீண்டும் இணைப்பார் (வசனம் 29; கொலோசெயர் 1:20).
நம் ஒவ்வொருவருக்கும் தேவனுடனும் மற்றவர்களுடனும் ஒப்புரவு தேவை மற்றும் அந்த ஒப்புரவு நமக்காக இயேசு செய்ததால் கிடைத்தது.
ஷெரிடன் வாய்ஸி
ஒப்புரவாக உங்களுக்கு யார் தேவை? கிறிஸ்துவின் பலி செயல்கள் அந்த ஒப்புரவிற்காய் உங்களுக்கு எவ்வாறு வழிகாட்டும்?
இயேசுவே உங்கள் சரீரத்தை உடைக்கப்படும் படியும் மற்றும் உங்கள் இரத்தத்தை சிந்தியும் தேவனுடனும் மற்றவர்களுடனும் நான் ஒப்புரவு ஆகும்படி செய்ததற்காக நன்றி.
இன்றைய வேத பகுதி | மத்தேயு 26:26-29
26 அவர்கள் போஜனம் பண்ணுகையில் இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து,அதைப் பிட்டு சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாய் இருக்கிறது என்றார்.
27 பின்பு பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அவர்களுக்கு கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்;
28 இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாய் இருக்கிறது.
29 இது முதல் இந்த திராட்சைப்பழரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.