என்றென்றும் பூக்கள்
ஒரு நாள், என் மகன் சேவியர் சிறுவனாய் இருந்த போது செயற்கை பூச்செண்டை கொடுத்தான். பட்டு வெள்ளை காலா அல்லி, மஞ்சள் சூரியகாந்தி, பர்பிள் ஹைடிராங்கியா பூக்களை கண்ணாடி ஜாடியில் அடுக்கியபோது சிரித்தான். “அம்மா அவை என்றென்றைக்கும் நிலைத்து இருக்கும். அவ்வளவாய் நான் உங்களை நேசிக்கிறேன்”, என்றான் .
பின்னர் ,என் பையன் இளைஞனாக வளர்ந்து விட்டான். அந்த பட்டு இதழ்கள் உதிர்ந்தன. அந்த நிறங்கள் மங்கி விட்டன. இன்னும் என்றென்றும் பூக்கள் அவனது வணக்கத்தை எனக்கு நினைவூட்டுகின்றன. மேலும் அது எனக்கு நினைவிற்கு கொண்டு வருகிறது, உண்மையாகவே நிலைத்திருக்கும் ஒரு விஷயம், அவருடைய தவறாத மற்றும் நீடித்த வசனத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் எல்லையற்ற மற்றும் நீடித்த அன்பு ஏசாயா 40 :8
இஸ்ரவேலர்கள் தொடர்ச்சியான சோதனைகளை எதிர் கொண்டபோது,தேவனின் நீடித்த வசனங்களில் விசுவாசத்துடன் ஏசாயா அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்கள் தீர்க்கதரிசியை நம்பினர், ஏனெனில் அவர் கவனம் சூழ்நிலைகளில் அன்று தேவன் மீதே நிலைத்து இருந்தது.
நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் துன்பங்கள் நிறைந்த உலகில், நமது உணர்வுகள் எப்பொழுதும் மாறுகின்றன ,மேலும் நமது மரணத்தைப் போலவே வரையறுக்கப்பட்டுள்ளன. (வசனம் 6-7). இருப்பினும் நாம் தேவனுடைய மாறாத அன்பை நம்பலாம் மற்றும் நித்திய உண்மையான வசனம் மூலம் வெளிப்படுத்தப்படும் அவரின் தன்மையை நம்பலாம்.
சோச்சில்
|
|